புல்லின் வரலாறு
அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை கூற ஆசைப்படுகிறேன் ..........! இந்த நன்னாள் உங்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைக்கட்டும்...,
நான் இப்பொழுது கூற இருப்பது புல்லின் வரலாறு!
நாம் அனைவரும் புல் தரையில் அமர விரும்பிகிறோம்., ஆனால் அந்த புல்லை பற்றி தெரிந்து கொண்டோமா!
முன்னொரு காலத்தில் கடவுள் ஒரே புல்லின் குடும்பத்தை படைத்தாராம்., ஒரு கணவன் புல்.ஒரு மனைவி புல்., புல்லுக்கு இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பை கடவுள் தரவில்லையாம்.,., அப்பொழுது இரு புல்லுமே மிகவும் வருந்தியதாம்., நம் இனம் நம் இருவரோடையே அழிந்து விடுமே என மனைவி வருந்தியதாம்.,
அப்பொழுது கணவன் கூறியதாம்.,சரி நாம் இது குறித்து கடவுளிடம் வரம் கேட்போம் என தவம் செய்ய ஆரம்பித்ததாம்., கடவுள் கண் முன் தோன்றி என வரம் வேண்டும் என கேட்டதாம்., எங்கள் இனம் அழியும் நிலையில் உள்ளது.,எங்கள் இனத்தை பெருக்க வழி கூறுங்கள் இறைவா..........!
என முறையிட்டதாம்.,
அதற்கு கடவுள்.,உங்கள் இனம் மேலோங்க, உங்களின் மேல் அமரும் ஒவ்வொரு மனித இனத்தின் ஆடையில் உங்கள் மகரந்தம் ஒட்டி கொள்ளும்.,அது ,மனித இன கண்களுக்கு தெரியாது., அவர்கள் மட்டுமே உங்களை பரப்ப முடியும்., எல்லா இடங்களிலும் உங்கள் இனம் தான் அதிகமாக இருக்கும் என்று கூறி மறைந்தார்.,
இவ்வாறு தான் புல்லின் இனம் பெருகியது., பெருகி கொண்டு இருக்கிறது.,