ஆற்றங்கரையில் அரசமரத்தடியில் பிள்ளையார்
ஆற்றங்கரையில் அரசமரத்தடியில் பிள்ளையார் அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம் ?
பிள்ளையாருக்கு அம்மா மீது அளவற்ற பாசம். அம்மா எங்கே போனாலும் அவனும் பின் செல்வது வழக்கம். அன்னை பார்வதி குளிக்கச்சென்ற பொழுது அவனும் கூட வருவேன் என்று அடம் பிடிக்க, அவன் அன்னை பிள்ளையாரை ஒருவழியாக சமாதானம் செய்து, குளியலறை வாசலில் அமர்ந்திருக்கப் பணித்து, யாரையும் உள்ளே வரவிடலாகாது என்று சொல்லி குளிக்கச் சென்றாள்.
அப்பொழுது அங்கு வந்த சிவபெருமானுக்கு பார்வதி குளிப்பதை பார்கத்தோன்றியதால், கதவை திறக்க முயன்றார். பிள்ளையார் அவரை தடுத்து நிறுத்தி, உள்ளே செல்ல மறுக்கவும், முன்கோபியான சிவன் பிள்ளையின் கழுத்தை வெட்டிவிட்டார். பிறகு, சினம் தனிய யானையின் தலையை பிள்ளைக்கு பொருத்திவிட, பிள்ளையார் என்று பெயர் பெற்றார் என்பது ஒரு கதை.
அன்று பிள்ளையார் ஒரு சபதம் பூண்டு, பெண்களின் பாதுகாப்பு கருதி பெண்கள் குளிக்கும் நதிக்கரை மற்றும் ஆற்றங்கரையில் வந்து அமர்ந்து கொண்டார்,