முதல் காதல்

நிலா விளையாட்டு தனமான பிள்ளை .....வயது 20
கயவன் -24 டிப்ளோமா படித்து கொண்டிருக்கிறான் ...

ஒருநாள் கயவன் வீட்டு வாசலில் அமர்ந்து படித்து கொண்டிருந்தான்
நிலா கோலம் போட்டு கொண்டு இருந்தாள்....... நிலாவை கண்டால் கயவனுக்கு பிடிக்காது ....

நிலா தோழிக்கு திருமணம் வந்தது .....திருமணதிருக்கு கயவனுக்கும் , நிலாக்கும் பத்திரிக்கை கொடுத்தாள்... திருமணதிருக்கு பஸ்சில் ஒருநாள் போக வேண்டும் ....

நிலாவின் அம்மா தனக்கு உடம்பு சரி இல்லப்பா நீ நிலாவை கூட்டிட்டு போ என்று கவனிடம் கூறினாள்...

கயவன் மனதில்
இருந்து இருந்து அவ கூட தான் போகனுமா நினைத்து கொண்டே சரி பார்க்கலாம் என்று கூறினான்

இருவரும் ஊருக்கு புறப்பட்டனர் .......
பஸ்சில் நிலா முன்னாடியும் கயவன் பின்னாடியும் உக்கார்ந்தான் ....

நிலா திரும்பி திரும்பி தன்னுடன் கயவன் வாறான என்று திரும்பி திரும்பி பார்த்து கொண்டே இருந்தாள் .....இது கயவனுக்கு கோவத்தை கிளப்பியது ...


ஊர் வந்துவிட்டது கயவனும் நிலாவும் நடந்து கொண்டே வந்தார்கள் .....ஒரு வயதான பாட்டி நடக்க முடியாமல் கையில் 3கிலோ அரிசியை கொண்டு நடந்து வந்தாள்.....உடனே நிலா பாட்டியே அதை தாங்க நான் கொண்டு வாரேன் வாங்கி கொண்டு நடந்தால் பாட்டியின் வீட்டுக்கு சென்று போய் கொடுத்தாள் பாட்டியும் ரொம்ப சந்தோஷபட்டால்....பாப்பா நீ ரொம்ப நல்லா இருக்கணும் ........பரவாஇல்ல பாட்டி என்று சொல்லி கொண்டு மண்டபம் நோக்கி போனாள்...

கயவனுக்கு கோவம் தலைக்கு ஏறியது ....

மண்டபம் வந்து விட்டவுடன் கயவன் தனியாக உக்கார்ந்திருந்தான் ....நிலா எல்லார்கிட்டயும் பேசி சிரிச்சிட்டு , சின்ன பிள்ளைங்களோட சந்தோசமா இருந்தாள் .....

(திருமணமும் முடிந்தது )

கல்யாண வீட்டில் இருந்து வெளிய வரும் போது ஒரு பெரிய கூட்டமே இருந்தது ....அவளை வழி அனுப்புவதற்கு .....கயவனுக்கு ஆச்சிரியமாக இருந்தது ...

பஸ்சில் இருவரும் ஒன்றாக அமர்நதிருந்தனர் .....கயவன் தூங்கி கொண்டிருந்தான் .....சிறுது நேரத்தில் முழித்து பார்த்தான் கையில் ஒரு குழந்தையே வைத்து கொஞ்சி விளையாடி கொண்டிருந்தாள் .......யாரு குழந்தை என்று கயவன் கேட்டான் ....பக்கத்துல அக்காவோடது ....திரும்பி பார்த்தேன் குழந்தையோட அம்மா பயங்கர தூக்கம் ...மறுபடியும் கயவன் தூங்கி விட்டான் ...

இறங்கும் இடம் வந்தது ..நிலா கயவனை எழுப்பி விட்டாள்.......இருவரும் ஊர் வந்து சேர்ந்தனர் ....

நிலா தன் வீட்டுக்கு சென்றாள்.......எல்லாரிடமும் பேசி சந்தோசமாக இருந்தாள் ...

கயவனுக்கு எதையோ விட்டு சென்றது போலே இருந்தது ...........நிலாவை அன்று காதலிக்க ஆரம்பித்தான் ....

மறுநாள் நிலா வருவா என்று வாசலில் காத்திருந்தான் அவள் வரவில்லை
நிலா கோவிலுக்கு வருவாள் தன் காதலை சொல்லலாம் என்று காத்திருந்தான் ........நிலா வரவில்லை ...
நிலா விடம் எப்படியாவது தன் காதலே சொல்லவேண்டும் நினைத்து வீட்டுக்கு சென்றான் அவள் அங்கு இல்லை ..
வீட்டிற்க்கு வந்து படுத்து தூங்கினான்....

(கனவில் நிலா ஒரு பத்திரிகையே கொடுக்கிறாள் .....கயவன் அதை எடுத்து பார்த்தால் அது கல்யாண பத்திரிக்கை )

கனவை கண்டு முழித்து விடுகிறான் ....
முழித்து பார்த்தால் நிஜமாகவை நிலா நிற்கிறாள் கையில் லவ் லட்டருடன் .......நான் உங்களை காதலிக்கிறேன் ----------
வியந்து நிற்கிறான் புன்னகையோடு

எழுதியவர் : lakshmi (30-Dec-13, 7:48 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 251

மேலே