சகிப்பும் சலிப்பும்

சகித்துக் கொள்வதா?
சலித்துக் கொள்வதா?
சமுதாய வீதியில்
சந்திக்கும் மனிதர்களிடம்
முந்திக்கும் ஊழலை
சகித்துக் கொள்வதா?
சலித்துக் கொள்வதா?

ஆட்டிப்படைக்கும் காகிதப் பணத்தால்
ஆடாமல் ஆடும் ஆட்டக்கார்களின்
ஆணவத்தைக் கண்டு
சகித்துக் கொள்வதா?
சலித்துக் கொள்வதா?

தெரியாததைப் போல் நடிக்கும்
தெருவீதி சுற்றியவர்கள்
தேர்தல் பலத்தால் தலைவனாகி
தேவையற்றதை எல்லாம்
தலைத் தூக்கவைக்கும் - சதி
திட்டங்களைக் கண்டு
சகித்துக் கொள்வதா?
சலித்துக் கொள்வதா?

விளக்கொளியில் வாழத் தெரியாத
விவரங்கெட்ட மனிதர்கள் - நிர்வாக
விவரங்களில் தலையிட்டு
விபரீதத்தை விதைத்து வருவதை
சகித்துக் கொள்வதா?
சலித்துக் கொள்வதா?

நீட்டும் இடங்களில் எல்லாம்
நிமிர்ந்த தலைக் கணத்தில்
துணிந்து கைநாட்டு இட்டு
துள்ளும் மனிதர்களின்
தூய நெறியற்றதை கண்டு
சகித்துக் கொள்வதா?
சலித்துக் கொள்வதா?

அரசின் அங்கீகாரம் பெற்றாலும்
உரசும் உறுத்தல்கள் உள்ளே உள்ளதை
உணர்ந்தும் உருப்படாதவர்களின்
லீலைகளை சகித்துக் கொள்வதா?
சலித்துக் கொள்வதா?

பதவியில் இருக்கின்றபோதே
பணத்தை பேச வைக்கின்ற கொடிய
பயணத்தில் பயணிப்போர்களின்
அயனத்தை சகித்துக் கொள்வதா?
சலித்துக் கொள்வதா?

யுகத்தில் யுத்தத்தை யூகத்தோடு
அகத்தில் காட்டாமல் சதியின்
அர்த்தத்தில் உறவாடுவோர்களின்
சொர்க்கத்தை சகித்துக் கொள்வதா?
சலித்துக் கொள்வதா?

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (30-Dec-13, 8:47 pm)
பார்வை : 105

மேலே