நான் கல்லா கடவுளா - நாகூர் கவி
மலையாய் இருந்த
என்னை
வெடிபொருளாலே
பாறையாக்கினாய்... !
பாறையாய் இருந்த
என்னை
எந்திரத்தாலே
கற்களாயாக்கினாய்...!
அழகாய் செதுக்கி
அனைவரும் பார்க்க
சிலைகளாய் வடித்தாய்... !
தெய்வமாக
என்னை வணங்க
பெரும் பக்தர் கூட்டம்... !
தேவனாக
என்னை வணங்க
பெரும் சித்தர் கூட்டம்...!
பொம்மையாக நான்
சிறு மழலை கையில்
விளையாட்டு பொருளாயாவேன்..!
அம்மாவாக நான்
தாயில்லா குழந்தை கையில்
தாலாட்டும் பொருளாயாவேன்... !
பூமியில் வாழ்ந்து மறைந்த
உயிரினங்களின்
வாழ்வை காட்டும்
முகவரியாவேன்... !
கோட்டைக்குள்ளே
என்னை நீயும்
காட்சி பொருளாய்
வைத்திடுவாய்... !
தொன்மை தொட்ட
பொருள் நானென்று
உலகெங்கும்
பறை சாற்றிடுவாய்... !
என்னை பார்த்து
கவிகள் புனைவர்
கவிஞர் பலரும்...!
என்னை விற்றே
மனிதன் பிழைத்தான்
யுகத்தில் நாளும்... !
என்னை கடவுள்
என்பார் பலர்
என்னை வெறும் கல்லே
என்பார் சிலர்...!