அரசியல்வாதி

உலகம் என்னும் நாடக மேடை
அதில் ஆளுக்கொரு வேடம்
அதும் நாளுகொரு வேடம்

அதை மாற்றி விட்டவன் இவன்
அரசியல் அரிதாரம் பூசி
ஆண்டாண்டாய் வாழ்ந்து வருகிறான்

மாண்டு போனாலும் மரியாதை கேட்கிறான்
இரண்டு காலின்றி வாழ்கின்றனர் பலர்
இவன் நான்கு காலின்றி வாழ மறுக்கிறான்

அந்த "நாற்காலி" யின்றி வாழ மறுக்கிறான்
ஆயிரம் ஆயிரம் வசனங்கள் பேசுவான்
காலில் விழுந்தேனும் கதைகள் பேசுவான்
அனைத்தும் பொய் என அறிந்தும் பேசுவான்

வேடம் ஒன்றேனும் போதிலும்
உள்ளொன்று புறமொன்று
முன்னொன்று பின்னொன்று என
பல படங்கள் காட்டுவான்

எல்லாரும் தனை கவனிக்க வேண்டுவான்
இல்லையெனில் உண்ணாவிரதம், மறியல்
என மக்களை தூண்டுவான் அறியா
மக்களை தூண்டுவான்

கொள்கையே இல்லாதவன் கட்சி
கொள்கையே தெரியாதவன்
கோட்டையே அவன் இலக்கு
கேட்டால் போடுவன் வழக்கு- அவனை
கேள்வி கேட்டால் போடுவான் வழக்கு

எல்லாம் சொல்லிவிட்டேனா -இல்லை
இன்னும் இருக்குது இன்னும் நிறைய
நிறைய இருக்குது கொஞ்சம் பொறுங்கள்

முடித்து வருகிறேன் அவன்
போடபோகும் வழக்கை-
"மான நஷ்ட" வழக்கை

எழுதியவர் : நிலா மகள் (31-Dec-13, 10:56 am)
Tanglish : arasiyalvaathi
பார்வை : 132

மேலே