தாலி

தாலியின் மூன்று முடிச்சின் அர்த்தம்:
முன்பின் அறிமுகமில்லாத
இரண்டு ஜீவன்கள்
இணைவதுதான் உண்மையான
திருமணம், இத்திருமணத்தை
(1)இறைவன் சாட்சியாகவும்
(2)பெரியவர்கள்
சாட்சியாகவும்
(3) தன்னுடைய மனசாட்சியைக்
கொண்டும் ஓர் ஆண் மகன்
தாலியைக் கட்டுகிறான்,
இந்த மூன்று சாட்சிகளை மூன்று முடிச்சுகளாக
உருவகப்படுத்துவதே தாலி
கட்டுவதன் அர்த்தமாகும்.