சிங்கார சென்னை
பளிங்கை போல பளபளக்கும் - மாநகர
குடி தண்ணீர்...!
தமிழ் உச்சரிப்பு மாறாத - தனியார்
தொலைக்காட்சி அறிவிப்பாளர்...!
தமிழ் நடையில் விளம்பர பலகைகள் ...!
முற்போக்கு சிந்தனை கொண்ட - பள்ளி
மாணவர்கள்...!
மண்வாசனை தெளிக்கும் என் தமிழ்பெண்
சேலை வாசம்..!
மேடு பள்ளம் அல்லாது மெருகேறி நிற்கும் - சோலையுர்ச் சாலைகள்...!
கோடை மழையில் நனைந்த தெருக்கள்..!
இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் -
இளைஞர் கூட்டம்...!
கைபேசி இல்லா நடைபயணிகள்..!
கைவீசி செல்லும் நர்சரிப் பிஞ்சுகள்..!
மின்சார நிறுத்தம் இல்லா இரவுகள்...!
குப்பை இல்லா மெரினா கடற்கரை..!
பொது கூட்டம் பேரணிகள் செல்லாத அரசியல்வாதிகள் ...!
இரைச்சல்கள் குறைந்த இருசக்கர வாகனங்கள்..!
இரக்கம் இறைமை போற்றும் மக்கள்..!
சிங்காரமாய் ! என் சென்னை !
வியப்பில் என் விழிகள் -
விடிந்தது தெரியாமல் உறங்கியதால்!!