எல்லாம் உனக்காக பகுதி 3

என் கனவுகளின் கருபொருளாய்
இருந்து காணாமல் போகிறாய்
கண்முன்னே கானல் நீராய்
தாகமுடன் என் காதல் ...............


சின்ன சின்ன பூசல்கள்
சின்ன சின்ன சிணுங்கல்கள்
பரவும் ஒற்றை பனியாய் உன் பார்வை
நடுவே நடுவே என் கவிதை
இதுதான் காதலோ ...............


என்னை புலம்ப விட்டு
ரசிப்பது உனக்கு பிடித்த ஒன்று என்றாலும்
அங்கே ஆளின்றி தவிக்கிறது
என் காதல் என்னும் தேடல் .............

எழுதியவர் : ருத்ரன் (31-Dec-13, 5:16 pm)
பார்வை : 75

மேலே