கணிதமும் கவிதையும் - ஒரு சிறு முயற்சி
பிடித்ததால்
செலவு - என்மனம்
வரவு - உன்மனம்
நடந்த பரிமாற்றத்தில்
தரகு -
விமர்சிக்கும் தகுதி !!!
_____________________________
ஒற்றுமை கூட்டி
வேற்றுமை கழிந்து
அன்பைப் பெருக்கி
வெறுப்பை வகு !!!
_____________________________
இன்ப நினைவை
தொகைப்படுத்து
துன்ப நிகழ்வை
வகைப்படுத்து !!
_____________________________
நீ என்ன அல்ஜிப்ராவா
புரியாத புதிராகவே எப்பொழுதும் !!!
_____________________________
வாழ்க்கைப் பின்னத்தில்
தகு பின்னமும்
தகா பின்னமும்
பணம் பார்த்தே
மனம் பார்த்தன்று !!
_______________________________
உன்னைக் கண்ட
நாள் முதல்
திசையிலியாய் நான்
உன்னைத்தொட
நான் இட்ட கோடு
தொடுகோடாக்க நான் முயல
இணை கோடாக்குகிறாய் நீ !!
___________________________________
பூஜ்ஜியமாய்
இருந்த என்னை
உயர்த்திப்பிடித்த
இயல் எண் நீ !
நீயும் நானும் இணைந்தே
முழு எண்கள்
நீயின்றி நான்
என்றும் பூஜ்ஜியமே !!
__________________________________
கணித வடிவியலின்
இலக்கணம் நீ !
அமுதசுரப்பி நீ !
நின் வளைவுகள்
கோடுகள்
வடிவுகள்
இராமனுஜம்
கண்டிருந்தால்
கணிதத்தில்
புதுமை பல
புகுத்திருப்பான் !!!
__________________________________
பெண்ணே
உன்னுலகில்
சிறு புள்ளி நான்
உனது அன்பே
நிபந்தனையாய்
உன்னைசுற்றியே
எனது
வாழ்வின் நியமப்பாதை
என்னை இயக்கும்
இயக்குவரை நீயே !!!
_________________________________
நேர்மையில்
நேர்கோடாய் இரு
விட்டுக்கொடுப்பதில்
வளைகோடாய் இரு
உன் இணைக்கு
இணைகோடாய் இரு
உன்மேல் அன்புகொண்டவர்களுக்கு
எப்பொழுதும்
தொடுகோடாய் இரு !!
________________________________
தோழமைகளுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!