இது என்ன வாழ்க்கையோ
காலையில் கண்விழித்தேன்,,,,, என் விலைஉயர்ந்த கடிகாரம் மணி 6 என்றது,,,, எழுந்து அமர்ந்தேன்
சூரியனின் வெண் கதிர்கள் என் வீட்டில் மீது மட்டும் வெண்மையை குறைத்தது போல ஒரு உணர்வு பணம் இருந்தால் இப்படி கூட நடக்குமா ???
மனதில் எழுந்த கேள்வியோடு என் அறையை பார்த்தேன் எல்லாமே விலை உயர்ந்த பொருட்கள்,,, புறா இறகினும் மென்மையான பஞ்சு மெத்தை, உலகிலே உயர்ந்த பெல்ஜியம் கண்ணாடி
ஏன்,,, என் குளியல் அறை குழாய் கூட தங்கநிறத்தால் மினுமினுத்தது,,,,,, இதெல்லாம் ஒன்றும் புதிதாக என் வாழ்வில் வந்ததில்லை, இன்று புதிதாய் வந்தது ஒரு எண்ணம் மட்டும் தான் ,,"இவை எல்லாம் எதற்காக???"
மெல்ல ஜன்னல் வழி வெளியே பார்த்தேன்,,,, கண்ணெட்டும் தூரம் வரை எல்லாம் என் உடைமைகள் தான்,,,,, வளமான தேயிலை தோட்டம் அதும் உயர் ரக தேயிலைதான்,,,, எங்கும் குளுமை,,, பசுமை,,, மனம் இனிக்கும் தருணம் தான்,,,, ஆனால் "இவை எல்லாம் எதற்காக??"- அந்த கேள்வி மட்டும் என்னை விடுவதாய் இல்லை
குழப்பத்தோடு வெளியே வந்தேன்,,,, நடை பயில கால்கள் கெஞ்சியது,,, அதற்கு துணை வேண்டுமே,,, என் கைத்தடி அதும் உயர் ரகம் தான்,,, பர்மா தேக்கில் செய்தது,,, அதன் பிடிக்கூட தங்கத்தால் இழைத்தது
கையில் பிடித்தபடி எட்டு வைத்தேன்,,,,, மழலை பருவத்தில் என் முதல் அடி என் அன்னையின் கை பிடித்து வைத்த ஒரு உணர்வு
என்னை நான் அடையாளம் கண்டுகொண்ட நாள் முதல் என் வாழ்வு ஒரு பாதை நதியாக எங்கும் நிற்காமல் நகர்ந்து கொண்டே தான் போகிறது,,, நான் நிறுத்த முயன்ற போது கூட அது நிற்கவில்லை,,, தடைகள் வந்த போதுக்கூட சில சோகங்களை மட்டும் பரிசளித்து விட்டு அது நகர்ந்து கொண்டே தான் இருந்தது,,,,
"இதெல்லாம் எதற்காக???"- இந்த கேள்வி மட்டும் இன்று என்னை விடாமல் துரத்துகிறது,,,
என் சிந்தை இப்போது என் வாலிப வயதினை தொட்டது,,,, என் முதல் காதல்,,, என் பவித்ரா
இதோ இந்த தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளி தான் அவள்,,, ஆனாலும் என் மனம் புகுந்த தேவமங்கை
என் மீது உண்மையான காதல் வைத்த காரணத்தால்,,, அந்த தேவலோகம் போனவள்,,, காதலிக்க தெரிந்த எனக்கு,,, ஜாதி, பணம், அந்தஸ்து தெரியவில்லை
அவைகளுக்கெல்லாம் என் காதல் தெரியவில்லை,,, பலிவாங்கி கொண்டது அவளை,, கண்ணீர் கடலானேன்,,,,
என் மண வாழ்வு.,,,, என் வாழ்வு அவளோடு முடியவில்லை அதன் பின் வந்தாள் சுமத்ரா,,, மீண்டும் வாழ்வு சிறக்கதான் செய்தது,,, நானும் சிரிக்கத்தான் செய்தேன்,,,,, மகேஷ், சுதா- என் மகனும் மகளும்
இங்கு படித்து வெளிநாடு போனவன் என் மகன்,,,, மகளோ மணவீடு போய்விட்டாள்,,, அதன் பின் சுமத்ராவும் என்னை விட்டு சென்று விட்டாள்
என் தனிமை,,, அதும் இந்த தள்ளாத வயதில்,,, இதை அந்த பணம் சரிகட்டுமா,,, இல்லை அந்தஸ்த்து தான் சரிகட்டுமா??
எல்லாம் நினைவலையில் ஓடி முடிந்து புள்ளியாய் மறைந்தும் போனது,,,, "இதெல்லாம் எதற்கு??? இத்தனை நாள் இல்லாத இந்த நினைவுகள் மொத்தமாய் என் மனகண்ணில் வர காரணம்" - யோசித்த வண்ணம் நடந்தேன்
அங்கு எதோ ஒரு சலசலப்பு,,,, மெல்ல நடையை துரித படுத்தினேன்,,, அந்த சலசலப்பு முடிந்த இடமோ என் வீடுதான்
அங்கு என்ன நான் இல்லாத என் வீட்டில் என்ன நடக்கிறது இன்னும் துரிதமாய் நடக்க தொடங்கினேன்
மாடி வரை தொடர்ந்தது அந்த சலசலப்பு,,, எங்கும் மனிதர் கூட்டம்,,, ஏன் இப்படி என்ன நடக்கிறது???
மாடி ஏறினேன் அப்போது தான் புரிந்தது என்னை யாரும் கவனிக்கவே இல்லை எல்லாரும் அவரவர் வேலையை பார்க்கிறார்கள்
சிலர் என் படுக்கைக்கு போவதும் வருவதுமாய் இருக்க,,, கோபம் தான் வந்தது,,, என்னை கேட்காமல் என் அறைக்குள் அவர்களின் பிரவேசமா???
வேக நடை போட்டேன்,,, என் அறையில் உள் நுழைந்தேன்,,,, என்ன ஆச்சர்யம்,,,
என் படுக்கையில் நான் அதும் உணர்வற்ற நிலையில்,,,,,,,,
என்னை சுற்றி தெரிந்தவர், அறிமுகமானவர், நண்பர் என உறவினர் கூட்டம்,,, என் உறவுகள் தான் இல்லை
மகனுக்கு "விசா' கிடைக்கவில்லை,,, மகளோ சுற்றுலா சென்று இருக்கிறாளாம் அவள் எப்படி அறிவாள்,,, என் விதி இது வென்று
மெல்ல கூட்டம் ஏறிக்கொண்டே போனது,,, என் வாழ்வில் நான் இத்தனை மனிதர்களை சம்பாதித்து உள்ளேனா!!!!!!!!! ஆச்சர்யம் கலந்த ஒரு மகிழ்ச்சி
ஆனால் அத்துணையும் தங்கமில்லையே,,, சிலர் என் வீட்டை அளவெடுக்க,,, சிலர் என் உயிலை தேடி தேடிதல் படலம் நடத்தி கொண்டிருந்தனர்
விந்தை மனிதர்கள்,,, இவ்வளவும் என்னுடையது நானே போய்விட்டேன் இதை வைத்து இவர்கள் மட்டும் எத்துனை காலம் வாழ்ந்திட முடியும்
என் சடங்குகள் ஆரம்பம் ஆனது,,,, பொறுமையாய் பார்த்து கொண்டிருக்கிறேன்,,, அங்கு உண்மையில் எனக்காக அழும் கண்ணும், கண்ணீரும் இருக்கிறதா என்று
என் உறவுகள் என் பெயர் மறந்ததோ??? என்னை "பிணம்" என்று அழைக்கிறார்கள்
இதோ என் ஊர்வலம்,,,, நான்கு காலில் தவழ்ந்த நான்,,, இரண்டு காலில் நடந்த நான்.,,,, மூன்றாம் காலையும் நாடிய நான் போகிறேன் எட்டு காலில்,,,
பஞ்சு மெத்தையில் படுத்த உடல் கட்டு விறகில்,,, பார்க்கவே கஷ்டமா உள்ளது,,, இது தான் என் இறுதி படுக்கையோ??? இதில் படுக்கவா இத்துனை காலம் பணம் சேர்த்தேன்??? புகழ் சேர்த்தேன்???
இதோ என் முகமும் மூடப்பட்டது,,,,, கொழுந்து விட்டெரியும் தீயில் எல்லாம் பொசுங்கி சாம்பல் ஆனது
இந்த தீயில் உண்டோ?? இவன் பணக்காரன், இவன் ஏழை, இவன் உயர்ந்த சாதி, இவன் தாழ்ந்த சாதி???
இல்லையே எல்லாம் ஒன்றாக தான் எரிந்து போனது,,,,,,,,,
நானும் கரைந்து போகிறேன் காற்றோடு,,,, நான் சேர்த்த சொத்து எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தந்திருக்கலாம் இவை பற்றி எல்லாம் என் தலைமுறைக்கு எடுத்து சொல்லி போக.,,,,,,
"ம்ம்ம் எம்மா பெரிய வூட்ட கட்டுனாரு, எம்மா சொத்து செத்தாரு பாவம் புள்ள கையாள கொல்லி போட குடுத்து வைக்கல ,,,,,,,"- இது ஊராரின் பேச்சானது
"குறை இல்லா மனிதன் இல்லை
குறை இல்லையேல் அவன் மனிதனே இல்லை "