காதல் அழகானது
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் அழகானது
என் காதலியை பார்க்கும் போது
காதல் சுவையானது
அவள் குரலை கேட்க்கும் போது
காதல் மணமானது
அவள் கூந்தல் என்மீது உரசும் போது
காதல் இன்பமானது
அவள் வெக்கப்பட்டு சிரிக்கும் போது
காதல் கடுமையானது
அவள் என் அருகில் இருக்கும் போது
காதல் உண்மையானது
அவள் மணவறையில் என் அருகே அமரும் போது
காதல் சுகமானது
அவள் தலையில் மல்லிகை பூவை வைக்கும் போது
காதல் புனிதமானது
அவள் என் குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது