முதல் நாள் ​பெற்ற முத்தான விருது 01012014

கருத்தாய்வு மாமணி விருது - 2013
----------------
மெய்மறந்தேன் மெய்சிலிர்த்தேன் நானும்
பெய்யாத மழையும் என்மீது பெய்ததாய் !
விண்வெளியில் பறந்தேன் சிறகின்றி
விண்ணில் மின்னிடும் நட்சத்திரமானேன் !

புத்தாண்டின் முதல்நாள் என் கரங்களில்
புத்துணர்வாய் வந்தது வழங்கிய விருது !
புதினங்கள் படைத்திட ஊக்கம் பிறந்தது
புதியதோர் உலகம் காண வழியும் வகுத்தது !

என்நெஞ்சில் சோலை என்றும் எழுத்து தளம்
என்வாழ்வில் எனனோடு ஒன்றிய களம் !
நட்புவட்டம் விரிந்திட உதவிய தளம்
நட்புகளை உறவாய் மாற்றிய உன்னத களம் !

என் எழுத்துக்கள் உயிரானது இங்கேதான்
எண்ணங்கள் உருபெற்றதும் இங்கேதான் !
என்னை நேசிப்பவர்கள் அதிகம் இங்கே
என் தமிழை சுவாசிப்பவர்களும் இங்கே !

மூத்த படைப்பாளிகள் எனக்கு வழிகாட்டிகள்
இளைய கவிஞர்கள் இதயத்தில் வாழ்பவர்கள் !
சாதிமதம் இல்லா சகோதரத்துவம் காண்கிறேன்
சலனங்கள் தோன்றாத சமத்துவம் பார்க்கின்றேன் !

விருதினை வழங்கிய விவேகமுள்ள நிர்வாகம்
வீரத் தமிழை உணர்வுடன் ஊட்டிடும் கவிஞர்கள்
ஊக்கமளித்து உள்ளத்தை மகிழ்வித்த கருத்துக்கள்
உயிராய் போற்றும் என் அருமை நண்பர்கள் பலர்

எண்ணற்ற அனபர்களும் நண்பர்களும் என்னுள்
ஏணிப்படிகளில் ஏற்றவைத்த அன்புள்ளங்கள் !
ஏக்கத்தையும் தாக்கத்தையும் எழுதியதாலே
என்னையும் உள்ளத்தில் வைத்தனர் உயர்வாய் !

உள்ளத்தில் எழுந்ததை கொட்டி தீர்த்தேன்
உறைந்து நிறைந்துள்ளது உள்ளத்தில் மேலும்
உருகிட உருகிட உருவாகும் கவிதைகள் பல
உள்ளங்களும் வாசிக்கும் உளமார வாழ்த்தும் !

அகந்தை இல்லா அடக்கமிகு அகன் அண்ணன்
அய்யா என்று பலராலும் அழைக்கப்படும் கொ பி பி
குன்றாத குமரியார் மறக்க முடியாத நாகூர் கவி
அன்பு சகோதரிகள் ஷ்யாமளா, சரண்யா, சுதாவிற்கும்

சாந்தமிகு சாந்தி, உமா மகேஸ்வரி, வானதிக்கும்
பாசமிகு ரத்தினமூர்த்தி, இனியவன், கவிஜிக்கும்
இன்பமிகு ஈஸ்வரன், தயா ,கே எஸ் கலை, அவர்களுக்கும் தோழி மகேஸ்வரி, கார்த்திகா, பானுவிற்கும் நன்றி !

நண்பர்கள் ஜெயராஜா ஹனாப் நடராஜ் திலகவதி
கல்பனா பாரதி , தாரகை , பாரூக் , அஹமத் அலி
சுவாமிநாதன் , சகானா தாஸ் , நிஷா மெஹரைன்
சந்தோஷ் குமார் ,பொள்ளாச்சி அபிக்கும் நன்றி !

அருமை வேளாங்கண்ணி , இலக்கியா , சூறாவளி
நிலாமகள் , அருமை நண்பர் ஹரிஹர நாராயண்
தட்சசு ,வெள்ளூர் ராஜா , கீதா பாலசுப்ரமணியன்
தவமணி ,ப்ரியா அசோக் , கார்த்திக்கும் நன்றி !

அன்பு ஐயா கன்னியப்பன் , ஆனந்த் ,அனுசரண்
புலமி அம்பிகா , வளர்மதி , சாந்தி ராஜி ,ப்ரியா
சங்கரன் ஐயா , தம்பு , நிலா சூரியன் ,முருக பூபதி
யாத்விகா கோமு , சரோ அவர்களுக்கும் நன்றி !

ராஜமாணிக்கம் , ப்ரியாலக்ஷ்மி , ஷர்மி கார்த்திக் ,
லாரன்ஸ் ,அழகர்சாமி , புனிதா வேளாங்கன்னி , மீனா சோமசுந்தரம் அவர்களுக்கும் நன்றி !

( என் நினைவில் வந்த பெயர்கள் இவை,
சிலர் பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் .
அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி )

இந்த விருது என் அன்னைக்கு சமர்ப்பணம் .

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Jan-14, 6:56 pm)
பார்வை : 517

மேலே