செய்தி தாள் கணவன்மார்கள்

செய்தித்தாள் கணவன்மார்கள் ..
காலை வேளையில்
கணவன்மார்களின்
காலை வேலை ..
கண் முன் தாளை(செய்தி) வைத்து
கவலையன்றி
கண்ணாடி போட்டு வரி வரியாய் வசித்து
கட்டிய மனைவி
சமையல் அறையில்
இடி மின்னலுடன் கனத்த மழை பொழிந்தாலும்
அரசியல் ஊழல்களை அலசி
நாள் தோறும் நடக்கும்
நகை கொள்ளைகளை பற்றிய
புள்ளி கணக்குகளை சேகரித்து
மரண செய்திகளுக்கு
மௌன அஞ்சலி செய்து
காவேரி தண்ணீர் பிரச்சினைக்காக
கண்ணீர் விட்டு
கொல்லை கொல்லையாக நடக்கும்
கொலைகளை பற்றிய விபரம் சேர்த்து
அயல் நாட்டு விவகாரம்
உள் நாட்டு விவகாரம் என ஒன்று விடாமல் படித்து
பொது அறிவு களஞ்சியம் என
பெயர் எடுக்க
பெரும் பாடு படும் கணவன்மார்களே ..
இனிய இல்லத்தை உருவாக்க
கடமையை கண் முன் நிறுத்தி
வாழ்கையை வரி வரியாய் வாசிக்கும்
மனைவியின் இதய ஓட்டம் சீராய் ஓட
நீங்களும் மனைவியுடன் வாழ்க்கையை படிக்க
முயலுங்களேன் ..
சிறந்த தம்பதிகள் என
உங்கள் பெயர் செய்தி தாளில் வரட்டும் ..