அவள் ஒரு அனாதை
நேற்று அவளை என்
தெருபக்கம் கண்டேன்
பிச்சை கேட்டு வந்தால்
ஒருத்தி பரிதாபத்தில்
சில்லரையை வீசினர்
சிலர்
என்
எதிர்வீட்டு வயசான
அம்மாதான்
அவளின் பசிக்குத்
உணவு தந்தார்
அவளிடம் அந்த
அம்மா?
உனக்கென்று யாருமில்லை
என கேட்டார்
அவளின் கண்களில்
கண்ணீர்தான்
நிரம்பியது
தவறாக
கேட்டு இருந்தால்
மன்னிக்கவும்
என்றால் அந்த
அம்மா!
அப்படி ஏதும்
இல்லையம்மா? என
கையில்
பாத்திரத்தோடு நடக்க
ஆரம்பித்தால்
நெஞ்சில் சோகம்தான்
ஆதரவின்றி அன்பின்றி
வளர்ந்தவள்
யார் இருக்கிறார்
அவளுக்கு நானும்
அவளுக்காக அழ
தொடங்கினேன்
இப்படிக் கூட
இருக்கிறார்களா?
என
அந்த
முட்டுசந்து ஓரம்
அவளின்
சடலத்தை கண்டேன்
கிழிந்த உடையுடன்
இறந்தவளாய்
இரக்கப்பட்டு அவளை
அடக்கம்
செய்தேன் பாவம்!
அவள் ஓர் அனாதை....!