மனோநிலை.
மனமே,
நீ மாண்பினில் உறைந்தால்,
மட்டற்ற தனமே!
மனமே,
நீ மகிமையில் குறைந்தால்,
மட்டற்ற சினமே!
மனமே,
நீ அன்பினில் நிறைந்தால்,
அளவற்ற நலமே!
மனமே,
நீ பண்பினில் குறைந்தால்,
அளவற்ற மலமே!
மனமே,
நீ அமைதியில் மிகுந்தால்,
ஆனந்த லயமே!
மனமே,
நீ அவதியைத் துறந்தால்,
அற்புத சுகமே!
மனமே,
நீ மருளினில் குறைந்தால்,
மட்டிலா ஒளியே!
மனமே,
நீ அருளினில் நிறைந்தால்,
அளப்பரிய களிப்பே!
மனமே,
நீ அகத்தினில் நிறைந்தால்.
சுகத்திலெலாம் சுகமே!
மனமே,
நீ ஆத்மனில் புகுந்தால்,
ஆத்மார்த்த சுகமே!
பாலு குருசுவாமி