என் காதலி
கனவின் காரணி நீ!
நினைவில் ஓரலை நீ!
கற்பின் தூரிகை நீ!
மழையின் சாரல் நீ!
மயிலின் தோகை நீ!
கனிவின் பிறப்பிடம் நீ!
கதிரவனின் கண்களை உடையவள் நீ!
என் மனம் கவர்ந்தக் காதலி நீ!
கவிதைப் பாடினால்
உன் முகம் சிரிப்பதும் ...
மமதைக் கூறினால்
மயக்கத்தோடு வருவதும்...
என்ன அழகு.....!!!
அன்பே இனி உன்னைக் காதலிக்க
காரணமும் வேண்டுமோ ????