திரும்பி வருமா,,,,,,,,,

திரும்பி வருமா ??
திரும்பி வருமா??

முத்து நெல் வெதச்சி
முளைக்காத நெல்அறுத்த
காலம் திரும்பி வருமா???

சக்கர வண்டி வச்சி
சந்தையில வித்த
காலம் திரும்பி வருமா???

பச்ச பசேலென
பாய் விரிச்ச
பச்சை வயல்
பாத்து ரசிச்ச
காலம் திரும்பி வருமா??

வெள்ள கொக்கு வந்து
ஒத்தக்காலில் தவம் செய்ய
கருப்பு கொடபுடிச்சி
பண்ணையாரு பாத்த
காலம் திரும்பி வருமா???

வயலில் பாடுபட்ட
மச்சான் உனக்காக
மஞ்ச நான் குளிச்சி
மீன் கொழம்பு கொண்டுவந்த
காலம் திரும்பி வருமா???
அந்த காலம் திரும்பி வருமா???

எழுதியவர் : நிலா மகள் (2-Jan-14, 4:47 pm)
பார்வை : 173

மேலே