இரவுக் காற்றில்

இரவுக்
காற்றில்
இன்பம் காணும்..

இனிமையான
பழக்கம் உண்டு
என்னிடம்..!

அது
எப்படி இருக்கும் என்று
நினைக்கும் போது..

உடலுக்குள்
உணர்ச்சிகள் உற்றெடுக்கும்...

நிலவின்
ஒளி வரும்
தெருவில்
நிம்மதியாய் படுத்து..

தென்றல்
வழியாக
தென்னை மரம்
ஆடுவதைக் கண்டு...

இலைகள் கூட
என்னுடன்
தனிமையில் இருக்க
தன்னை
உதிர்த்து கொண்டு வர...

எத்தனை முறை
ஏங்கி இருக்கிறேன்
தெரியுமா..?

இன்னும்
கொஞ்ச நேரம்
இருந்துவிட வேண்டும் என்று...

அப்போது
என்
மனம் சொல்லும்...

மரணம் வந்தால் கூட
அதை
மறுக்காமல்
ஏற்றுக்கொள் என்று..!

எழுதியவர் : தமிழ் மகன் (2-Jan-14, 7:07 pm)
Tanglish : iravuk kaatril
பார்வை : 124

மேலே