உழவனின் எதார்த்தம்
அழகான
வெள்ளை நிறப் பிள்ளை
என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் ...
ஆனால் ,
இந்த உழவனுக்கு மட்டும்
கருநிறப் பிள்ளை மேல் தான்
ஆசை அதிகம் ...
அதனால் தான் ,
அவர்களின்
அம்மா
அந்த வானத்திடம்
தலை உயர்த்திக்
கேட்கிறான்...
உன்
வெள்ளை நிறப் பிள்ளை
நான்கு மாதத்திற்கு
மட்டும் இருக்கட்டும் ...
உன்
கருநிறப் பிள்ளை
எட்டு மாதத்திற்கு
என்னோடு இருக்கட்டும் ...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
