ஹைக்கூ -கணினி

செவ்வாயில் என் காதலி
தூது போனது மின்காந்த புறா
மின் அஞ்சல்.
```````````````````````````````````
தொலைந்து போனேன்
நொடிகளில் காட்டிக்கொடுத்தது
கூகுள் தேடுதளம்
```````````````````````````````````
எல்லைக்கோடுகள் இல்லை
சர்வதேசமும் நேசிக்கப்படுகிறது
முகநூல்.
```````````````````````````````````
எந்திரமாக என் குழந்தை
தொடைகள் தொட்டில்
மடிக்கணினி.
```````````````````````````````````
அம்பலமாகும் தகவல்
பிரபஞ்சத்தின் திரை
இணைய உலாவி.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (4-Jan-14, 2:04 am)
பார்வை : 366

மேலே