நினைவு புத்தகம்
அது ஒரு நினைவு புத்தகம் அதில்நானும் அவளும் வாழ்ந்த நாட்கள்தான் நிரம்பி இருக்கும் எழுத்துகளாய் வெறுத்த நிமிடமும், நேசித்த பழகிய கொஞ்சி திரிந்தநாட்களே அதிகம் யார்வேண்டுமானாலும் படிக்கலாம் அந்த புத்தகத்தை கண்ணீர் தேங்கி நின்றால் மனதை திடபடுத்திக் கொள்ளவும் யாரென்று தெரியாமல் இருவரும் மனதை தொலைத்தோம் பிரிவொன்று வந்து எங்களை பிரிக்கும் என்றுத் தெரியாமல் காயங்கள் ஆயிரமாகி கலங்கி நிற்பதுதான் மிச்சம் என் கன்னத்தில் தாடியும் அவள்நெஞ்சில் நானும் நரக வாழ்க்கைதான் தினமும் இருவரும் விட்டு சென்றது ஒன்றுதான் அவைகள்தான் நினைவு புத்தகம்....!