விடியலின் விழித்தெழல்

காலையில் கண் விழிக்கிறேன்
பறவைகளின் ஒலிகள் கேட்கிறேன்
சங்கீதமாய் !
பூக்களின் வாசம் நுகர்கிறேன்
நறுமணமாய் !
மெல்லிய சந்தன வெளிச்சம்
யன்னல் ஊடே !
பூந்தேகப் பூரிப்பில்
மெல்லப் புன்னகைக்கிறேன்
எனக்குள் நானாக !
இதயத்துள் இதமாக !
தலையணையை
கட்டியணைக்கிறேன்
எனது செல்ல குழந்தையாக !