விருப்பம் போல் வளர விடுங்கள்
அவள் சப்தமாய் சிரிக்கட்டும்
சிரிக்க விடுங்கள்
அவள் கனவுகளை துரத்தட்டும்
கலைக்காதீர்கள்
அவள் பறவை போல் பறக்கட்டும்
சிறகுகள் முறிக்காதீர்கள்
மதில் ஏறி குதிக்கட்டும்
மரம் ஏறி களிக்கட்டும்
மறுக்காதீர்கள்
மணமான மறு கணமே எல்லாம்
மறுக்கப் படலாம் - இல்லை
மறந்து போகலாம் அதுவரை
அவளை அவள் விருப்பம் போல்
வளர விடுங்கள் !