Anjana - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Anjana
இடம்:  Jaffna, Sri Lanka
பிறந்த தேதி :  21-Oct-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Dec-2013
பார்த்தவர்கள்:  152
புள்ளி:  11

என் படைப்புகள்
Anjana செய்திகள்
Anjana - Anjana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2020 1:53 am

பணத்தை
வீசி எறிந்துவிட்டு போவதற்கு
நான் ஒன்றும்
விபச்சார பெண்ணல்ல!

பிரசவ வலியால்
துடிக்கிற மனைவிகூட
உன் கண்களுக்கு
தாசியை தான் தெரிகிறாளோ?

பெண்ணாய்
பிறந்ததினால் தான்
எல்லோரும்
விலைபேசிப் போகிறார்களோ???

மேலும்

அருமை 07-Jun-2020 11:32 pm
Anjana - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2020 1:53 am

பணத்தை
வீசி எறிந்துவிட்டு போவதற்கு
நான் ஒன்றும்
விபச்சார பெண்ணல்ல!

பிரசவ வலியால்
துடிக்கிற மனைவிகூட
உன் கண்களுக்கு
தாசியை தான் தெரிகிறாளோ?

பெண்ணாய்
பிறந்ததினால் தான்
எல்லோரும்
விலைபேசிப் போகிறார்களோ???

மேலும்

அருமை 07-Jun-2020 11:32 pm
Anjana - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2017 7:56 am

தொப்புள் கொடி அறுத்த அவள் உறவும்
தொப்புள் கொடி அறுத்து வந்த உன் உறவுமே
என்னுள் ஒரு உள்ளுணர்வு உறவை உணர்கிறேன்

அம்மா என்றழைத்த உன் உறவும்
அம்மா என்றழைத்த என் உறவும்
இன்று நான் உனக்கு ஒரு சமர்ப்பணம்

அம்மா என்றழைத்த என் உறவு
நான் அம்மா என்றுணர்ந்த உணர்வை
உணர்கிறேன் எனக்குள் என் அம்மாவை!.

மேலும்

praveen குமார் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2014 10:16 am

மொழியின் கர்ப்பம்!!!
என் தமிழென்னும் கற்ப பையில்
கவி என்னும் சிசுவும் வளர!!!
ஆணா பெண்ணா கேட்கிறார்கள்...
சிலர் ஸ்கேன் செய்தும் பார்க்கிறார்கள்!!

வலிகள் அதிகம்...அதனால்
வார்த்தைகள் தடிக்கும்-சில நேரம்
பரவசம் அதிகம்...அதனால்
பனித்துளி பரவும்!!!

வெகுஜன பார்வையில் நான் மலடு!!
நான் மட்டும் அறிவேன் எந்தன் சுவடு!!
வலித்திடும் போது ஆறுதல் வேண்டாம்
சிறு அரவனை போதும் உள்ளம் மகிழ!!

உணர்வுகள்- அது ஊமையாக!!
உவமைகள்- அது நீங்கலாக!!
நலமாய் பெற்றெடுப்பேன்-என்
கவியென்னும் குழந்தையை!!!

மேலும்

அருமை தோழா, நீர் பெற்ற உமது கவி மகள் மிகவும் அழகை இருக்கிறாள் 03-May-2014 8:57 am
அருமை . 13-Feb-2014 7:55 pm
அழகு 13-Feb-2014 7:45 pm
கவி குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 13-Feb-2014 3:22 pm
svshanmu அளித்த படைப்பில் (public) naga mani மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2014 12:50 pm

கரு: பன்முகம் காட்டும் பெண்முகம். ஒரு ஆயுளில் பல பரிணாமம் கொள்ளும் பெண்ணினப் பெருமை

முன் ஒருத்தி அழகணிந்து
என்னெதிரே நின்றாள் - என்

பின் ஒருத்தி தலைகுனிந்து
நடைபயின்று வந்தாள்

கண் ஒருத்தி கவிழத்தான்
கட்டிலிலே கனிந்தாள்

பண் ஒருத்தி பாடித்தான்
அழுகுரலை தணித்தாள்

தன் ஒருத்தி எண்ணாமல்
ஆணின்பணி புரிந்தால்

என் ஒருத்தி இடர்போழுது
தோழியாக இருந்தாள்

விண் ஒருத்தி தீண்டும் வண்ணம்
குலமகளாய் உயர்ந்தாள்

மண் ஒருத்தி சேரும்வரை
மாற்றத்தையே மணந்தாள்
மாற்றத்தையே மணந்தாள்!!!

மேலும்

மிக்க நன்றி நட்பே 11-Sep-2014 3:42 pm
அருமை தோழா, பெண்ணின் பரிணாமம் உமது படைப்பின் வாயிலவத்து பலருக்குப் புரியட்டும். 03-May-2014 9:01 am
தங்கள் கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறேன் சகோதரி. எனது காதல் தண்டவாளம் 178558 என்னும் படைப்பில் வரம்பு மீராமல் இருக்க ததலிலும் சற்று சகோதரத்துவம் வேண்டும் என்று பதிவு செய்துள்ளேன். முடிந்தால் படிக்கவும் 18-Feb-2014 4:38 pm
svshanmu அளித்த படைப்பில் (public) செல்லம்மா பாரதி மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Feb-2014 8:15 am

மனிதா உன்
அழகு வலிமை
அறிவு அந்தஸ்து
கொண்டு ஆணவம்
கொள்ளாதே

உன்னுடன் இருக்க
பிடிக்காது உன்னுடல்
விட்டுச் சென்ற
எச்சத்தின் மிச்சம்தான்
உன்னுருவம் என்பதை
மறந்துவிடாதே...

மேலும்

அருமை ..... 01-Feb-2015 11:07 pm
மிக்க நன்றி தோழமையே 04-Mar-2014 5:00 pm
மிக்க நன்றி தோழமையே 04-Mar-2014 5:00 pm
உண்மை தான் :) 04-Mar-2014 11:58 am
Anjana - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2014 9:02 am

நிசப்தம்

எனக்குள்ளே
ஒரு நிசப்தப் போராட்டம்

என்னை அறியாமல்
எனக்குள் நானாக!

தனிமையில்
சிந்திக்கையில்!

வேதனைகள் என் மனதை !
வாட்டுகையில் !

சொல்லவந்ததை சொல்லமுடியாமல்
தவிக்கையில் !

வேதனைகளோடு
நானும் நிசப்தமாகிறேன்.

மேலும்

இந்த நிசப்தம் சத்தமாய் ஒலிக்கவேண்டும் 10-Jun-2020 8:04 pm
அருமை, உமது நிசப்தத்திற்கு காரணம் வேதனிகள் மட்டும்தான் என்றால், நான் இறைவனை ப்ராத்திதுக்கொள்கிரேன் உமது நிசப்த்தம் உடைய. நற்படைப்பு தந்தமைக்கு நன்றி தோழி 03-May-2014 9:11 am
நிசப்தம் அருமை 06-Feb-2014 12:40 pm
நன்று.... 06-Feb-2014 10:49 am
Anjana - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2014 9:40 am

தடுமாறிய பயணம்

விதி வரைந்த பாதை இது
வழி தடுமாறியதே!

வழி தடுமாறிய வேளையிலே
விதி முடிந்ததுவே!

பயணங்கள் முடிவதில்லை
பாதைகள் மாறியதால்!

மாற்றங்கள் நிகழ்கிறதே
தடுமாறிய பயணங்களால்!!!

மேலும்

உண்மைதான் தோழமையே 04-Feb-2014 12:30 am
மாற்றம் ஒன்றே மாறாதது!!! 02-Feb-2014 6:48 pm
அதுதான் வாழ்க்கை பயணம் . நன்றே 02-Feb-2014 2:37 pm
உண்மை, அழகு :) 02-Feb-2014 9:45 am
காதலாரா அளித்த படைப்பில் (public) s.sankusubramanian மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Jan-2014 10:06 am

என் காதல் அழியலாம்
அன்னையாய் வாழும் அண்ணிக்காக !!

எங்கோ தொலைந்த அன்னை அன்பை
இந்த விழிகள் வழியே பார்த்தேன் !!

இரவில் எந்நேரம் வந்தாலும்
உணவிட்டு மகிழும் விதத்தை
என்னவென்று சொல்வேன் - அச்சமயம்
நான் சொல்வதோ போதுமென்று
வரும் வார்த்தையோ இன்னும் கொஞ்சமென்று !!

என்றும் உழைத்தாலும்
நற்பெயர் யாதுமில்லை - அதற்காக
கண்ணீர் சிந்தாமல்
புன்னகை மட்டும் பரிசாய் தரும் அழகு !!

இன்னல்களை கூட என்னிடம்
பகிர்ந்து கொண்ட இதயம்
என்னை உருக வைத்தது !!

நான் செல்லும் போது பணம் தராமல்
அந்த கரங்கள் இருந்ததில்லை .
நான் வேண்டாம் என சொல்லி
இதயம் உடைவதை நான் விரும்பவில்லை

மேலும்

மிக நன்றி தோழமையே !! நீண்ட நாள்களுக்கு பின்னும் இக்கவியை படித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் !! தங்கள் வரவில் மகிழ்ச்சி ! 06-Feb-2014 4:21 pm
தேடி வந்த சோகம் எல்லாம் அன்பில் பட்டு அழிந்து போனது !! அருமை தோழா - அழகான வரிகள் 06-Feb-2014 4:16 pm
நீண்ட நாள்களுக்கு பின்னும் இக்கவியை தேடி வந்து படித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் !! மிக நன்றி தோழமையே !! 06-Feb-2014 3:43 pm
அருமை . 06-Feb-2014 3:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (69)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

புதுச்சேரி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (69)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA

இவரை பின்தொடர்பவர்கள் (69)

மேலே