நான் அரவணைக்க ஒரு உறவு

தொப்புள் கொடி அறுத்த அவள் உறவும்
தொப்புள் கொடி அறுத்து வந்த உன் உறவுமே
என்னுள் ஒரு உள்ளுணர்வு உறவை உணர்கிறேன்

அம்மா என்றழைத்த உன் உறவும்
அம்மா என்றழைத்த என் உறவும்
இன்று நான் உனக்கு ஒரு சமர்ப்பணம்

அம்மா என்றழைத்த என் உறவு
நான் அம்மா என்றுணர்ந்த உணர்வை
உணர்கிறேன் எனக்குள் என் அம்மாவை!.

எழுதியவர் : ANJANA (18-May-17, 7:56 am)
சேர்த்தது : Anjana
பார்வை : 155

மேலே