பரிணாமம்

கரு: பன்முகம் காட்டும் பெண்முகம். ஒரு ஆயுளில் பல பரிணாமம் கொள்ளும் பெண்ணினப் பெருமை

முன் ஒருத்தி அழகணிந்து
என்னெதிரே நின்றாள் - என்

பின் ஒருத்தி தலைகுனிந்து
நடைபயின்று வந்தாள்

கண் ஒருத்தி கவிழத்தான்
கட்டிலிலே கனிந்தாள்

பண் ஒருத்தி பாடித்தான்
அழுகுரலை தணித்தாள்

தன் ஒருத்தி எண்ணாமல்
ஆணின்பணி புரிந்தால்

என் ஒருத்தி இடர்போழுது
தோழியாக இருந்தாள்

விண் ஒருத்தி தீண்டும் வண்ணம்
குலமகளாய் உயர்ந்தாள்

மண் ஒருத்தி சேரும்வரை
மாற்றத்தையே மணந்தாள்
மாற்றத்தையே மணந்தாள்!!!

எழுதியவர் : சண்முகானந்தம் (4-Feb-14, 12:50 pm)
பார்வை : 1058

மேலே