வாழ்ந்து கொல்லும்
எத்தனை ஆயிரம் கொடுமை கண்டும்
மனதில் வன்மம் தீரவில்லை
இத்தனை கோடி மனிதன் வந்தும்
இனமும் ஒன்றென மாறவில்லை
காலத்தில் காலனும்
கொண்டு செல்வான்
அவன் பணி திருடிட
முந்து வதேன்?
ஓர் இடம் (சொர்க்கம்) சேர்க்கவே
மதங்களும் ஆனதே
ஓரிடம் (உலகில்) சேர்ந்ததால்
அமைதியும் போனதே
துப்பாக்கி தொலைத்திட்ட
தோட்டாக்கள் எத்தனை
தப்பிய மனிதனின்
எண்ணிக்கை அத்தனை
பசுமை உலகையே
பாலையாய் ஆக்கினோம்
செம்மை ஆக்கிட
குருதியால் கழுவினோம்
தெறித்த இரத்தமும்
தீ என மாறுமோ
வன்மமும் அதனிலே
வெந்துதான் சாகுமோ
காலனின் கண்ணிலே
மண்ணையே தூவுதே
வன்முறை உலகிலே
வாழ்ந்துதான் கொல்லுதே