புத்தம் புதிய வருடமே

உலகெங்கும் அமைதி...
உயிர்களுக்கு உறுதி...
தந்திடு... வருடமே... இனிய வருடமே !
மனிதர்க்கு முயற்சி...
மனதிற்கு மகிழ்ச்சி...
தந்திடு... வருடமே... இனிய வருடமே !
இயற்கைக்கு இளமை...
இசைதனில் இனிமை...
தந்திடு... வருடமே... இனிய வருடமே !
நன்மை செய்யும் நண்பர்கள் ...
நலம் விரும்பும் உறவுகள்...
தந்திடு... வருடமே... இனிய வருடமே !
வன்முறையில்லா வாழ்க்கை...
வறட்சியற்ற வளமை...
தந்திடு... வருடமே... இனிய வருடமே !
இணைபிரியாத மக்கள்...
இறைவனிடமிருந்து வரங்கள்...
தந்திடு... வருடமே... இனிய வருடமே !

எழுதியவர் : ரோஜா மீரான் (4-Feb-14, 12:11 pm)
பார்வை : 80

மேலே