எல்லாமே சங்கீதம்

அதிகாலை ஆற்றோசை
அலுக்காத சங்கீதம்
சலசலக்கும் நீரோடை
சலிக்காத சங்கீதம்
மூங்கில் காட்டின்
முழுமையான ஓசையோ
மெத்த சங்கீதம்
தத்தை பேசுமொழி
தித்திக்கும் சங்கீதம்
குயிலின் குரலோ
குதூகல சங்கீதம்
மழலை மொழி
மாசில்லா சங்கீதம்
மழையின் வரவோ
மேன்மையான சங்கீதம்
மொட்டவிழ்க்கும் ஓசை
மென்மையான சங்கீதம்
அலையின் ஓசையோ
உலராத சங்கீதம்
பனிதூங்கும் ஓசை
பளிச்சிடும் சங்கீதம்
புல்விரியும் ஓசையோ
புத்தம்புது சங்கீதம்
எறும்பூரும் ஓசை
எல்லையில்லா சங்கீதம்
தேனியின் ரீங்கார ஓசையோ
தெவிட்டாத சங்கீதம்
சிட்டுக்குருவியின் சிட் சிட் ஓசை
சிலிர்க்க வைக்கும் சங்கீதம்..........

எழுதியவர் : priyaram (4-Jan-14, 3:20 pm)
Tanglish : ellaame sangeetham
பார்வை : 99

மேலே