இயற்கை எனும் இனிய வேதம்

சிந்தையை உயரே வைத்து
செலுத்துவோம் நமது பார்வை

சந்திக்கும் காட்சியெல்லாம்
சத்தியமாய் இனிமையன்றோ ?!

உச்சிக்கு சென்ற பின்னே
உள்ளமதில் கர்வம் வேண்டாம்

வீழ்கின்றது கதிரின் ஒளி
வீழ்கின்றது அருவி நீர்

வீழ்வது அழகென்று
விளக்கம் நான் சொல்லவில்லை...

வாழ்வின் நிலை நன்றுணர்ந்து
வளம் பல பெறுவதற்கே.....

இயற்கையை ரசித்திருப்போம்
இனிய வேதம் அது நமக்கு....

இறை சிந்தனை அதை வளர்ப்போம்..
இயற்கை வடிவில் அது இருக்கு...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Jan-14, 5:15 pm)
பார்வை : 103

மேலே