கவிதையில் ஒரு பரமபதம்

கவிதையில் ஒரு பரமபதம்...
==========================

மாதம் ஒரு விளையாட்டு
மாதம் முழுதும் விளையாட்டு
காய்களென வடிக்கும் கவிதைகளே
ஆடுவோர் மட்டும் திரை மறைவினிலே!!!

பகடைகளாய் இங்கு பார்வைகளே
ஏணியும் பாம்பும் பெறும் வாக்கினிலே
விழுவதும் எழுவதும் கவிதைகளே
துன்புறுவதும் மகிழ்வதும் கவிஞர்களே!!!

ஏணியில் ஏறிடும் நேரம் முகம் மலரும்
பாம்பினில் இறங்கிடும் போதோ அது வாடும்
"எழுத்தினில்" வாடிக்கையான விளையாட்டு
சிலர் மகிழ்ச்சிக்குமே வைக்கும் அது வேட்டு!!!

ஆட்டத்தில் இருபது காய்களுண்டு
ஆடிடவும் இருபது புள்ளியுண்டு
ஆட்டிவைப்பார் அவரவர் வாக்கினிலே
கவிதை சரியுது உயருது வாக்கு உருட்டலிலே!!!

தரமென்ற வரிசைகள் இங்கில்லை
தரம் பிரித்திடவோ ஒரு வழியில்லை!!!
பார்வைகள் மதிப்பெண்கள் நிர்ணயங்கள்
தெரிவு நடைமுறை சரியோ உணருங்கள்!!!

பலப்பல பலவென படைப்புகளாம் - அவை
மாதத்தில் ஆறாயிரமும் கடந்திடுதாம்
ஆரோ ஆராய்வார் அத்தனையும்
நானறிவேன் எளிதல்ல தரமறிவதுவும்!!!

நல்வழி அறிந்தால் உரைத்திடுங்கள்
நடைமுறை வழிகளை மாற்றிடுங்கள்
தரமுள்ள கவிதைக்கே பரிசென்றாகட்டும்
விரைவினில் அதற்கே வழி பிறக்கட்டும்!!!

எழுதியவர் : சொ. சாந்தி (4-Jan-14, 8:47 pm)
பார்வை : 334

மேலே