+சின்ன விழி பார்வைபட‌ என் னிதயம் மலர்ந்ததடி+

விருப்பம் இல்லாத போது
விரும்பியது போல் சிரித்திட்டாய்!
விருப்பம் கொண்ட பிறகோநீ
திரும்பிப் பார்க்க மறுத்திட்டாய்!
திருப்பம் வரும் நாளுக்காய்
தினம் தினமும் காத்திருந்தேன்!
சிரிப்பைத் தரும் இதழுக்காய்
சிறிது நாளாய் பார்த்திருந்தேன்!
சின்ன விழி பார்வைபட‌
என் னிதயம் மலர்ந்ததடி!
எண்ணம் மகிழ்வாய் உணர்ந்தநொடி
என்னுள் கவிதை வந்ததடி!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Jan-14, 11:17 pm)
பார்வை : 151

மேலே