ஒலிபெருக்கியின் ஓலம்

செந்தமிழும் பைந்தமிழும்
நான் ஒலிபெருக்கினேன் ஒரு காலத்தே!

நான் வந்து இறங்கினால்தானே
திருவிழாவே களைகட்டும் ஒரு காலத்தே!

கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டுவிழா
இன்னும் எத்தனையோ சுப காரியங்கள்,
நான் இல்லாமல் எப்படி!

இப்பொதெல்லாம் நானும் இருக்கிறேன் -- ஆம்
உல்லாச விடுதிகளின் மது மயக்க ஆட்டத்தில்
தெருமுனை போலி வியாபாரிகளின் விளம்பரத்தில்
பொய்யான வாக்குறுதிகள் வழங்கும் வாக்கு சேகரிப்பில்!

இதையெல்லாம் பொருத்துக் கொண்டு, எங்கே
அழுதுவிட்டால் ஊருக்கெல்லாம் கேட்டுவிடுமோ என்று...!

எழுதியவர் : அலெக்சாண்டர் (5-Jan-14, 1:18 am)
பார்வை : 52

மேலே