அது போதும்

அந்த நாட்களில்
வான வில்லாய்
வண்ணமயமான
தருணங்களை
கபளீகாரம்
செய்து கொண்ட
துரோகக் கோடரி
ஆளமாக கீறிய
மாறாத ரணங்கள்
மனதோடு நிற்க
மறுபடியும்
நேசக் கரம் நீட்டும்
வேஷப்
பொக்கிஷங்களை
பிரித்துப் பார்க்க
மனமின்றி
வேகமாக நடந்து
சென்றுகொண்டிருக்கின்றன
அவள் கால்கள்!

..

எழுதியவர் : maathumai (5-Jan-14, 7:16 am)
Tanglish : athu pothum
பார்வை : 56

மேலே