முகமூடி உலகம்

காந்தியை காசிலும்
நேருவை சுதந்திரதினத்திலும்
வாழ்க்கையை சினிமாவிலும்
வழிபாட்டை ஆச்சிரமத்திலும்
கலாசாரத்தை இன்னும் கட்ட பஞ்சாயத்திலும் பார்த்து கொண்டிருந்தது போதும் ......!
சிறகு விரித்து வெளியே வா....!
புதிய உலகம் காத்து இருக்கு
நீ ...!
துணிந்து எழுந்தால் இந்த உலகம்
உனக்கு .....!
தேடினால் தான் கிடைக்கும் என்று தெரிந்த பின்னும்
நீ வாயை மூடி காத்திருந்து
என்ன லாபம்
முகமூடி உலகம் என்று தெரிந்த பின்னும்
நீயும் முகமூடியாக இருக்காதே
உன்னாலும் இந்த உலகை மாற்றலாம்
வலி மறந்து புதுமை செய்
வரும் பழி சுமந்து
புது உலகை செய்
வரும் வரைக்கும் காற்றாய் இரு
துணிவும் உண்மையும் இருந்தால்
சுனாமி போல் எழு
பினாமிகளுக்காய்உன்னை மறைத்து வாழாது செயல்படு ....!!!

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 8:22 am)
Tanglish : mugamoodi ulakam
பார்வை : 67

மேலே