இளிச்சவாயன் Mano Red

தலைப்பைப் படித்தவுடன்
உங்களை அறியாமல்
சிரித்துக் கொண்டே
என்னைப் பற்றி யோசித்தால்
நீங்களும் இளிச்சவாயன் தான்..!!

சிரிப்பை விழுங்கி கொண்டு
சினத்துடன் கவிதையில் நுழைவோம்..!!

கண்ணீரில் விதை செய்து
நெஞ்சில் அதை நட்டு வைத்து
அழுது புலம்பி தினமும்
கண்ணீரில் மரம் வளர்க்காமல்
சிரித்துக் கொண்டே
இளிச்சவாயனாக இருக்கலாம்..!!

ஒருபோதும் பிரியாத பாசம்,
எப்போதும் இல்லாத நேசம்,
எல்லாமே நாம் போடும் வேசம்,
நினைத்தாலே நெஞ்சம் கூசும்...!!
பொய்யான வாழ்க்கையை
கண்ணீரில் நனைக்காமல்
இளித்துக் கொண்டே ரசிக்கலாம்..!!

பல்லை மட்டும்
வெள்ளையாக வைத்து
என்ன பயன்....???
தினமும் அழுது அழுதே
வாழ்க்கை அங்கே
கருப்பாக போய் விடும் முன்
இளிச்சவாயன் ஆகி விடலாம்..!!

எல்லாமே ஒருநாள் மாறிவிடும்
இறப்பு நம்மை தேடி வரும்..!!
செத்துப் போன பின்
பேயாய் அலைவதை விட,
வாழப்போகும் சில காலம்
பேயாய் சிரிப்பதில் என்ன தவறு..??

பிறர் பார்வைக்கு நாம்
கிறுக்கனாக தெரிந்தாலும்,
நம் சுய சந்தோசத்திற்காக
இளிச்சவாயனாக இருக்கலாம்..!!

யார் எப்படி போனால் என்ன..??
நான் எப்போதோ ஆகிவிட்டேன்
இளிச்சவாயனாக....!!!!

எழுதியவர் : மனோ ரெட் (5-Jan-14, 10:40 am)
பார்வை : 185

மேலே