எழுத்தென்னபொருளென்ன
எழுத்தென்ன பொருளென்ன?
இலக்கியம் தானென்ன?
வல்லமை தானாகி
வாழ்ந்தவர் சாட்சியாக
வாழ்வாகி வாழ்வதற்கோ!
கதை என்ன கவிதையென்ன?
கட்டுரையும் தானென்ன?
இலக்கியம் தானாகி
இயல் இசை நாடகமாய்
இயற்கையாய் வாழ்வதற்கோ!
சொல்லென்ன சுவையென்ன?
சொல்லுவதும் தானென்ன?
நல்லியம் தானாகி
நல்லுறவாய் பூமிதன்னில்
நயமாக வாழ்வதற்கோ!
கலையென்ன சொல்லென்ன?
கலாச்சாரம் தானென்ன?
நிலையாக தானாகி
நீளுலகு ஒரு வீடாய்
நித்தியமாய் வாழ்வதற்கோ!
மனிதனும் பிறப்பதென்ன?
மனிதமும் தானென்ன?
புனிதமாய் தானாகி
புரிந்துமே பிறப்பதனை
புவியிருந்தும் வாழ்வதற்கோ!
சொல்லென்ன வலிமையென்ன?
சொல்லுவதும் மூலமென்ன?
காலமாய் தானாகி
கடமைகள் மறையாக
கலையன்றி ஆவதெதோ!
கொ.பெ.பி.அய்யா.