அம்மா

தலை நின்று அமரும் பருவத்தில்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா பாடி
தவழ்ந்து நிமிரும் நேரத்தில்
கை வீசம்மா கை வீசம்மா
என்று கடைக்கு கூட்டி போயி
சின்ன சின்ன எழுத்துக்கள் திக்கி திக்கி
தப்புத் தப்பாய் பேசும் பொழுதுகளில்
சிரித்து ரசித்து ....
அம்மா காணோம் என்று
முந்தானையில் முகம் மூடி
விலக்கி பிரித்ததும் ’பே’ எனச் சிரித்து
வாய் நிறைய காற்றடைத்து
தேங்காய் உடைக்கச் சொல்லித் தந்து
ஐந்து விரல்களுக்குள் சோறாக்கி
குழம்பு வைத்து.....எல்லோருக்கும் ஊட்டி
கிச்சு கிச்சு மூட்டி ....
வயிறு குலுங்க சிரிக்க வைத்து
பத்து மாத கருவேந்திய
வலி தவத்தை வரமாக்கி
உன்னோடு என்னையும்
மழலையாய் பிறக்க வைத்து
மகிழ்கிறதடா மகனே.....
என் தன்னிறைவு சுமக்கும்
தாய்மை கால பிரியங்கள்...............!!!!!!!!!

எழுதியவர் : Akramshaaa (5-Jan-14, 11:16 am)
Tanglish : amma
பார்வை : 57

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே