தோழமை

இன்று ஒரு பெருமூச்சு
இனியும் விடுவேன் உன்னை எண்ணி
நேற்றைய நம் நினைவுகள்
நேசம்தரும் கனவுகள்

வேறு யாருமில்லை - உன் போல்
வேண்டாம் இனியும்
இப்படி என்பால் உன் அன்பு
தசை என்பால் பிணைந்த நம் நட்பு

தாய் மடித்த தாலாட்டாய்
தந்தை தந்த பாதுகாப்பாய்
உடன்பிறப்பின் ஒற்றுமையாய்
உண்மையான ஓருரவாய்

நிதம் உனைக்கண்டேன்
நீயே என்னுலகம் என்றேன்


எழுதி வைக்கப்பட்ட
எந்த பந்தமும் இல்லை நமக்குள்
எனினும் அதற்கும் மேலொரு
எதிர் பார்ப்பிலா நெருக்கமுண்டு

கவலையோ கண்ணீரோ
கண்டுகொள்ளும்
அந்த புளியமரத்தடியும்
அனுதினம் சாயும் உன் மடியும்

அந்த இரட்டை ஜடை
அதில் ஒற்றை ரோஜா
இருவரும்
இணைபிரியா நடந்த ஒற்றையடி

புழுதி படிந்தாலும்
புரட்ட புரட்ட
சுகங்களை அள்ளித் தந்தன
சுகமான அந்த நினைவுகள்

பள்ளி பருவத்தில் நாம்
பாவாடை கட்டித் துள்ளித் திரிந்த நாட்கள்
மனக்கண்முன் இன்னும்
மறக்காமல் உழல்கிறது

இன்னுமொருமுறை வராதா அந்த
இனிய நினைவுகள்
புரட்டப்படாத பக்கங்களில்
புரளுமந்த நினைவுகள்

பாவடைகட்டி
பள்ளம் மேடென்று பாராது
துள்ளித் திரிந்து
உறவாடியதும்


பருவமேட்டிப் பார்க்கவே
பாவாடை தாவநியானதும் - அது
முதலில் ருசி பார்த்தது என்னோலும்
மூத்தவளான உன்னைத்தான்

எதிர் பார்க்கவில்லை நான்
ஏன் வந்தது நமக்குள்
இப்படியொரு
ஏழு நாள் பிரிவு

இனி பெரிய பிள்ளையாம் நீ
என்னோடு எங்கேயும் கை கோர்க்க வரமாட்டாயாம் எனக்கொரு சேதி
உன் தாயிடமிருந்து

அதை கேட்டு நாம்
அழுது தீர்த்த அந்த இரவுகள்
ஆளுக்காள் நமக்குள்
ஆறுதல் சொல்லிய நினைவுகள்

ஆனாலென்ன
ஆருக்கும் தெரியாமல்
கொல்லைப்புரமாய் வீட்டை விட்டு
கொளுத்தும் வெயிலில் வெளிக்கிரன்கியதும்

உன் போல தாவநியுடுத்தி
ஊர்வலமாய் கை கோர்த்து - நானும்
மஞ்சள் பூசி
மகிழ்ந்த காலம்

அடுத்த நாளே நானும்
ஆளான சேதி கேட்டு
உனக்கும் எனக்கும் சேர்த்து
உறுதியாய் சங்கிலி போட்டனர்

அன்றிலிருந்து உன் வீட்டில் நான்
என் வீட்டில் நீ உரிமையுடன்
கேலிகளும் கிண்டல்களுமாய்
நம் வீட்டுச் சுவருக்குள் நளினமிட்டதும்

ஊருக்குள் நம் பத்தி
ஆயிரம் பேச்சு
நெல்லுக்கு அரிசியாம்
நீயும் நானும்

ஏதோ ஒரு நாள்
எட்டூரில் இருந்துஒரு வரன்
பொன்னோடு உன்னை
பெண் கேட்டு வரவே

நல்ல இடம்
நமக்கும் சம்மதம் - என
வண்டி கட்டி நீ
வாக்கப்பட்டுப் போய் விட்டாய்

நீ போன சில நாளே
எனக்கும் இங்கொரு
நல்லவனை பார்த்து
கலியாணம் எனும் பெயரில்
கட்டி விட்டனர்

ஏக்கம் தான் மனசில்
ஏதோ ஒரு மூலையில்
நினைவுகள் வந்து
நிதம் ஆறுதல் சொல்லுது

நாலு வருஷம் களிஞ்சும் கூட
நானும் மறக்கவில்லை உன்னை
நினைவுகள் இன்னும்
நீங்காமல் வருகுது

புரியாத வாழ்வி கிடைத்த
புதையல் நீ
அறிமுகமில்லா உலகில் கிடைத்த
ஆறுதல் நீ

தெரிந்தே தொலைத்த
பொக்கிஷம் நீ
தேடியும் கிடைக்காத
திரவியம் நீ


திரும்பிப் பார்க்கும் பொழுதுகளிலே
திருட்டுப் போனது நம் நினைவுகள்
கண்சிமிட்டும் நொடிகளிலே
களவு போனது நம் காலங்கள்

எத்தனை கவியாத்திருப்பினும்
என் மேலான ஓர் கவிதை
தோழ் தந்த என்
தோழமையே

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (5-Jan-14, 12:57 pm)
Tanglish : tholamai
பார்வை : 438

மேலே