இனியும் வேண்டும் உந்தன் சுகமான வலி

கண்ணாடி பார்க்கும்
நொடிகளை எல்லாம்
விம்பமாய் காண்பது
உன்னைத்தான்..........

உறங்குகின்ற வேளைகளில்
கூட உதடுகள்
உச்சரிப்பது
உன் பெயரைத் தான் ........

காலம் உண்டு பண்ணும்
நச்சரிப்புகளிலும் கூட
உன் முகம் மட்டும்
உள்ளத்தில் இனிக்கிறது

பார்க்கும் இடமெல்லாம் நீதான்
விழிகளின் விளிம்புகளில்
அனுதினம் நின்று கொண்டு
கனவுகளைக் களவாடி என்


உணர்வுகளுடன் விளையாடுகிறாய்

"போதுமடி புன்னகையால் என்
இதயத்தை புண்ணாக்கும் முயற்சி "
இப்படியெல்லாம் சொல்ல

என்னால் இயலவில்லை

இனியும் வேண்டும் உந்தன் சுகமான வலி ...!!

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (5-Jan-14, 1:19 pm)
பார்வை : 84

மேலே