34 அப்பாவிடம் சொல்லிவிடுவேன்

சொந்தக் கவிதை -34
பால்குடிக்கமாட்டேன் என்றால் அப்பாவிடம்
சொல்லிவிடுவேன் என்பாய் பயந்து பால்குடித்துவிடுவேன்.
டிபன்சாப்பிடவில்லை என்றால் அப்பாவிடம்
சொல்லிவிடுவேன் என்பாய் பயந்து டிபன் சாப்பிட்டுவிடுவேன்
பள்ளிக்குபோகமாட்டேன் என்றால் அப்பாவிடம்
சொல்லிவிடுவேன் என்பாய் பயந்து பள்ளிக்குசென்றுவிடுவேன்
படிக்கவில்லை என்றால் அப்பாவிடம்
சொல்லிவிடுவேன் என்பாய் பயந்து படித்துவிடுவேன்
விளையாடச் செல்வேன் என்றால் அப்பாவிடம்
சொல்லிவிடுவேன் என்பாய் பயந்து விளையாடாமலிருந்து விட்டேன்
வேலைக்குப் போகமாட்டேன் என்றால் அப்பாவிடம்
சொல்லிவிடுவேன் என்பாய்
பயந்து வேலைக்கு போய்விட்டேன்
எங்கே நீபார்த்த ஒருவனை மணம் செய்யாவிட்டால்
அப்பாவிடம் சொல்வாயென பயந்து
நானே ஒருவனை மணந்துவிட்டேன்
இப்போ அப்பா பயந்து விடுவார் என்றால் என்னநியாயம் அம்மா?