எப்படி இப்படி -கே-எஸ்-கலை
எனையும்
எனைவிட உயரமாய்
அப்படி எப்படி ?
கருப்பு மையில்
எத்தனை கவிதைகள்
இப்பெரும் பூமியில்....?
இருட்டறை விளக்கில்
எத்தனை விசித்திரம்
எப்படி சாத்தியம் இப்படி...?
எத்தனை சித்திரம்
இப்படி வரைவது
வெள்ளைத் தூரிகையில் ?
====
தரையில் கடலில்
கூரையில் சோலையில்
பாறையில் பாலையில்...
வண்டோடு மலரோடு
வானோடு முகிலோடு
கையோடு மெய்யோடு....
தெருவில் தரையில்
மலையில் மழையில்
சாக்கடையில் பூக்கடையில்
எத்தனை சித்திரம்
வரைவது இப்படி
வெளிச்ச மையில் !
=====
சொல் நிழலே ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
