அடை மழை ஓய்ந்தபின்
நுணலின் ஓசை நிசப்தம் கிழிக்கும் !
நுளம்பு மேனியில் ஊசி குத்தும்!
நுழைவழி எங்கும் தண்ணீர் தங்கும் !
நுரையொடு குழம்பி உள்ளம் கேட்கும் !
நுகரும் காற்று ஈரல் நிறைக்கும் !
நுணங்கும் தேகம் குளிரால் நடுங்கும் !
நுரையிலி போலும் மௌனம் பேசும் !
நுள்ளிய மனதில் கவிதை பிறக்கும் !!
நுணங்கு = வாடல்
நுரையிலி = ஊமை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
