பண்டர்

ஏ ஆண்மகனே...
கண்களில் ஈரமில்லாமல்
பெண்களை வேட்டையாடுகிறாயே!!!
தாயிடம்
முளைப்பால் குடித்தவன்...
சகோதரியின்
தலைகோதலில் உறங்கியவன்...
நல்ல மனைவியின்
ஸபரிசம் கொண்டவன்...
நினைத்துப்பார்க்க மாட்டான்!
குடும்பங்களின் கண்களை
நனைத்துப்பார்க்க மாட்டான்!
ஈனப்பிறவியே...
ஆண்குறியிருப்பதால் மட்டும்
ஆணாவதில்லை...
இலக்கணம் கூறுகிறது
வேறும் பல தகுதிகள்!
மொட்டுக்களையும் பிடுங்குகிறாய்...
மலர்களையும் நசுக்குகிறாய்...
உனக்கென்று
தராதரம் இல்லை...
தன்மானம் இல்லை...
நீ
மனிதனாக வாழவே
தகுதி இல்லை!!
பிணத்தைத் திண்ணும்
கூட்டம்கூட போடுவதில்லை... .
நாணமில்லாத இந்த...
வெறியாட்டம்!
நீ ரசித்துச் செய்கிறாயே...
அதை...
தெரு நாய்க்கள்கூடச்
செய்து கண்டதில்லையே...
அவைகளை விடவா
நீ தரம்தாழ்ந்து விட்டாய்?
எத்தனை எத்தனை...
தற்கொலை முடிவுகள்...
உன்னைக் கொல்ல
தீர்மானங்கள் இல்லையே!!!
ஏன்??
நீ எப்படி மாண்டாலும்...
உன்னைப் புதைப்பார்கள்
ஆனால்...
பூழுக்களுக்கூட...
உன்னைத் தீண்ட
அருவருப்புத் தோன்றும்
பாவம்...
அவைகளின் சோற்றில்
மண்வாரியிட கூடாதென்பதாலோ.....!

எழுதியவர் : ஸ்ரீதுர்கா சூர்யா (6-Jan-14, 11:28 am)
பார்வை : 48

மேலே