தோல்வியில் வேள்வி

உன் சுவாசத்தை சுமந்து தான் என் கடைசி பயணம்
என்று கண்ணீரோடு கூறினாய்..என்னுள்
காதலை விதைத்து,கற்பனையை வளர்த்து ,இப்போது
பொய்த்துப்போன பருவமழையாய் மாறினாய்.
இரவு விடிந்தது என்று இருந்தேன் .ஆனால்
என் பகலல்லவா இரவானது.
உன் இதழ் உதிர்த்த வார்த்தைகள் மட்டுமே
என் உறவானது.
காதல் கனலை தீ என மூட்டினாய் .
கடைவிழி பார்வையால் நடைகளை மாற்றினாய்.
இன்று,உன் விரல் தொடும் தூரத்தில் இருந்தும்
பல மையில் இடைவெளி கூட்டினாய்.
உயிரோடு இறந்த நிலைக்கு எனை நீ மாற்றினாய் ,
உயிர் கொண்ட உயிர் கொள்ளியே ஈஎனடி என்னை ஏமாற்Riனாய் .

எழுதியவர் : கு. தமயந்தி (7-Jan-14, 9:46 pm)
சேர்த்தது : குதமயந்தி
பார்வை : 51

மேலே