ஏற்க மறுத்தாயோ
வானத்து நிலவில்
வைத்து
உனை தாலாட்டுவேன்..!
மேகத்தை
கிழித்து
உனக்கு ஆடையாக்குவேன்..!
அந்த சூரியனை
எடுத்து பூவாக
உன் தலையில் சூடுவேன்..!
நீ நடக்கும் பாதையை
அலங்கரிக்கும்
தோரணமாகுவேன்..!
என் இதயத்தில்
உன்னை
மகாராணியாக்குவேன்..!
என்றெல்லாம் எனக்கு
பொய் சொல்ல
தெரியாது...
பொய் சொல்ல
தெரியாது
என்ற காரணத்தால்
தானோ பெண்ணே!
என் காதலை
ஏற்க
மறுத்தாயோ?