வறுமை
சரித்திர ஏடுகளை புரட்டி
சாதனையாளனின்
பக்கங்களை வாசித்துப்
பார்த்தேன்;
உழைப்பெனும் மந்திரச்சொல்
உயிரினை உரசி
உத்வேகம் தந்தது
ஆனால் அத்தனை ஏடுகளும்
வறுமை என்னும் நூல்கொண்டு
தைக்கப்பட்டிருக்கிறதே...!
ஓஹோ -
வறுமைதான் நமக்கு
வளர்ச்சியோ!