பார்த்த ஞாபகம் இல்லையோ

மரகிலையில் அமர்ந்தபடி தாய் குரங்கு தன் குழந்தைக்கு உணவு அளிக்கிறது,
அங்கங்கே பறவைகள் கூட்டம் கூட்டமாக பறக்கும் காட்சி குயில்கள் கூவும் சத்தம்,
வழியில் ஒரு சிறிய ஓடம் அதில் சுத்தமான நீர் எட்டிபார்தல் நம் முகமே நமக்கு அழகாக தெரிந்தத ,
எங்கும் தூய்மையான காற்று மரங்கள் பேசிக்கொள்ளும் புரியாத அந்த மொழி என்று வழி எங்கும் அழகு .
கடைசியாக நான்கு தென்னை மரம் அதற்கு நடுவே ஒரு அழகான மரவீடு அதில் இருப்பவர்தான் ஸ்ரீதர் வாசுதேவன் அனன்யா இசை கல்லூரியின் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் .
ஹாய் !!! இதுதான் என்னோட வீடு எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் , நான் ரொம்ப ரசிச்ச இடமும் இதுதான் .. இங்க ஒரு அமைதி இருக்கு ஒரு அழகு இருக்க, இதோ இந்த பறவைகளின் சங்கீதம், இந்த மரங்கள் எல்லாம் சேர்ந்து வாசிக்கும் அந்த புல்லாங்குழல் ஓசை இது எல்லாத்துலையும் ஒரு ஜீவன் இருக்கு இதுதான் எனக்கு வேண்டும் இப்ப மட்டும் இல்லை எப்பவும் எனக்கு இது போதும் இந்த வாழ்கை போதும்..
ஆமாம் இந்த வருடத்தில் இசைத்துறையில் சிறப்பாக செயல் பட்டத்துக்காக எனக்கு இந்த விருது கிடைத்தது ஆனால் அதை பத்தி எனக்கு கவலை இல்லை ஏன் எனில் நான் இதை எல்லாம் எப்பவும் நான் எதிர்பார்த்ததில்லை ..

எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த மியூசிக் மேல ஏனோ அப்படி ஒரு ஆர்வம் இருந்துச்சி ஆனால் அதற்கு காரணம் மட்டும் தெரியல ..
நான் பள்ளியில் வகுப்பிற்கு சென்றதை விட , மியூசிக் ப்ராக்டிஸ்கு போனதுதான் அதிகம் இதனாலேயே எல்லா மேடம்கும் நான் ஒரு எதிரி மாதிரி..
அதனால படிப்புல கொஞ்சம் வீக்கான ஆளுதான் நான்,ரொம்பவே கஷ்டப்பட்டுதான் என் பள்ளி வாழ்கையை முடித்தேன் எனது மனதுக்குள் வெறும் மியூசிக் மட்டுமே ஓடிக்கிட்டு இருந்த நாட்கள் அது..
காலையில் 7 – 8 singing class போயிடுவேன் அப்பறம் evening guitar practice இந்த schedule என்னோட 4th standard-ல ஆரம்பிச்சது ..
ஆரம்பிச்சி வெச்சது என்னமோ என்னோட அப்பா தான் ஆனால் அவர் அப்பா நினைத்துஇருந்தார் போல ஒரு நாலு மணிநேரத்துக்கு என்னோட தொல்லையில் இருந்து அவர் விடுதலை பெற அப்ப இதுதான் ஒரே தீர்வு அப்படினு..
ஆனால் அவர் கண்டிப்பாக எதிர்பார்த்திருக்க மாட்டார் இந்த வாழ்கை தான் எனக்கு வேண்டும் அப்படின்னு நான் கேட்கப்போகின்றேன் என்று ..
ஆமாம் அவருக்கு நான் இதுல ஆர்வமா இருந்தது ஒரு கட்டத்துக்கு மேலே சுத்தமா பிடிகல அவரோட கனவு இதுதான் நான் medical படிக்கணும் ..
ஏனெனில் அவர் முன்னாடியே முடிவு பண்ணிவிட்டார் என் அண்ணன் MBA பண்ணனும் அப்படின்னு அவர் நினைத்த மாதிரியே அவனை ஒரு பிசினஸ்மேன் ஆக்கிவிட்டார் ஆமாம் KVS Software Solution Pvt யோட MD கார்த்திக் வாசுதேவன் தான் என்னோட அண்ணன் அந்த company வேர யாருடையதும் இல்லை என்னோட அப்பவோடதுதன் ..
அவரை பொறுத்தவரை அவர் நினைக்கரத்தை தான் மத்தவங்க செய்யணும் அதுக்கப்புறம் ஒரு கர்வமும் கூட அவருக்கு அதாவது தான் சொல்வது செய்வது எல்லாமே ரொம்ப சரியானதுதான் அப்படின்னு..
ஆனால் நான் அவர் வலைக்குள்ளே விழவில்லை ஆமாம் எனக்கு என்னோட அம்மா support இருந்துச்சி school life முடிஞ்சதுக்கப்புறம் அவர் நினைத்தமாதிரியே என்னை மெடிக்கல் பண்ண சொல்லி ரொம்பவே force பண்ணினார்..
ஆனால் நான் ரொம்ப தெளிவா இருந்தேன் அவர் அவர் வாழ்கையை அவர் அவர் தான் வாழவேண்டும் என்னோட வாழ்கையை நான்தான் வாழவேண்டும் அப்படின்னு ..
எப்படியோ அவரை சமாளிச்சி நான் மியூசிக் காலேஜ் சேர்ந்துவிட்டேன் அந்த நேரத்துல எனக்கு அதுவே ரொம்ப பெரியவிஷியமாக இருந்துச்சி ..
காலேஜ்கு ரொம்ப ஆர்வமா போனேன் நிறைய கத்துகிட்டேன் நிறைய கண்டுபிடிச்சேன் கூடவே நல்லாவே enjoy பண்ணேன் இந்த college life ஐ..
மியூசிக்கு அடுத்து நான் அதிகம் ஆர்வம்காட்டினது அப்படின்னுசொன்னா அதுகண்டிப்பா கிரிக்கெட்டில் தான். அது வெளிய தெரிந்த காலம் இந்த காலேஜ்ல தான் ..
என்னோட ஸ்கூல் கிரிக்கெட் டீம்ல நான்தான் கேப்டன் இப்போ காலேஜ் டீம்லையும்.
ஒரு பாஸ்ட் பௌலேர் வித் 146km/h..ஒரு பேட்ஸ்மேனும் கூட ..
ரவிசாஸ்திரி அப்புறம் விவிஎஸ் லக்ஷ்மன் மட்டுமே இதுவரை விளையாடி இருக்க அந்த footstock ஷாட் –ஐ விளையாடுவேன் இதுக்காகவும் நிறைய வகுப்ப கண்டிப்பா கட் அடிச்சி இருக்கேன் ..

என்னதான் நான் இப்படி கிரிக்கெட்டில் ஆர்வமா இருந்து இருந்தாலும் மியூசிக் கூட இதை ஒப்பிடும் போது ரொம்ப சின்னதாத்தான் தெரிஞ்சது..
இந்த மியூசிக்கும் எனக்கும் ஆனா உறவு ஒரு கவிதை மாதிரி அந்த உறவு எப்படிபட்டதுனா ஒரு தாய்கும் மகனுக்கும் ஆனா உறவை போன்றது, ஒரு புல்லாங்குழலுக்கும் அதில் இருந்து வெளிவரும் காற்றுக்கும் ஆனா உறவை போன்றது இது உங்களுக்கு புரியுதான்னு எனக்கு சரியா தெரியவில்லை ஆனால் உங்களுக்கு புரியவில்லை என்றால் இதுக்குமேல எனக்கு எப்படி புரியவைக்கறதுன்னு சத்தியமா தெரியல .
அப்பாவும் அண்ணனும் குடும்ப சுமையை தூக்கி சுமந்து கொண்டு இருந்தபொழுது ஒரு இளங்கன்றாய் சுற்றி திரிந்த காலம் அது
கல்லூரி வாழ்கை முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி என்வாழ்க்கை நகர ஆரம்பித்தது .
அடுத்து என்ன பண்ண போறே ஸ்ரீதர் ??
அப்பாவிடம் இருந்து கேள்வி,
அவர் கூறினார் என் நண்பன் ஒரு உதவி இயக்குனர் அடுத்து படம் பண்ண போறான் அவன் கிட்ட சொல்லியிருக்கேன் நீ நாளைக்கு போய் அவனை பார் என்று..
ஆனா எனக்கு படம் பண்ணனும் இசைஅமைப்பாளர் ஆகவேண்டு என்றுஎல்லாம் ஆசை இல்லை என் ஆசை எல்லாம் ஒரு இசை கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் அப்பாவிடம் இதை சொல்வதற்கே பயமாக இருந்தது எனக்கு..
காரணம் தான் தெரியுமே அவரோட ஆசையே நான் மெடிக்கல் பண்ணனும் என்பது தான் .அதை எல்லாம் சமாளிச்சி நான் மியூசிக் காலேஜ் சேர்ந்ததே ரொம்ப பெரிய விஷயம் இப்போ படம் பண்ண மாட்டேன் நான் ஒரு மியூசிக் காலேஜ் ஆரம்பிக்கணும் அதுக்கு பணம் வேண்டும் அப்படின்னு சொன்ன அப்புறம் அவ்ளோதான் வீட்ட விட்டே அனுப்சிடுவாறு..
கல்லூரியை நான் மட்டும் ஆரம்பிக்க முடியாது என்று எனக்கு தெரியும் நானும் என் நண்பர்களும் ஒன்றாக சேர்ந்து ஆரம்பிக ஏற்கனவே முடிவு செய்து இருந்தோம் நாங்கள் மூன்று பேரும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தோம் கல்லூரி வரை..
என் அப்பாவிடம் சொன்னேன் என் ஆசையை என் கனவை ..
நான் எதிர்பார்த்ததுபோலவே அவர் ஒதுக்கவே இல்லை பேசிப்பார்த்தார் திட்டி பார்த்தார் நான் ஒத்துகொள்ளவில்லை..
கடைசியில் அவர் சொன்னது இதுதான் நான் தருகிறேன் உனக்கு பணத்தை .ஆனால் அது நீ கேட்டதுகாகவோ அல்லது உன்மீது உள்ள பாசத்திற்காகவோ அல்ல என்னை மதிக்காமல் நீ எடுத்த முடிவு தப்பு என்று உணர வேண்டும் அதுக்காக தான், ஆனால் அப்படி நீ உணரும் பொழுது உன்னை நான் ஆதரிக்க மாட்டேன் இன்று முதல் உன் வாழ்கையை உன்னிடம் ஒப்படைக்கிறேன் அதில் வெற்றி பெற்றாலும் எனக்கு கவலை இல்லை தோல்வியுற்றாலும் எனக்கு கவலை இல்லை என்றார்..
ஒருவழியாக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கல்லூரியை ஆரம்பித்தோம் .ஆரம்பத்தில் ஒரு சிறிய இசை பள்ளியை போன்றுதான் இருந்தது .
நன்றாக போய்கொண்டு இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைய ஆரம்பித்தோம்..

அப்போழுதுதுதான் எங்களுக்கு இடையே வந்தால் அனன்யா
என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் அப்படின்னு எனக்கு சொல்லிகொடுத்துவிட்டு போனவள் ..ஒரு தேவதை...
அவளை நான் காதலிக்கவில்லை நான் காதலிக்க நினைத்தபோது அவள் எனஅருகில் இல்லை
ஒரு மாணவியாக எங்கள் இசை பள்ளிக்குள் நுழைந்தால் ஆனால் கல்லூரி படிப்பை எங்களுடன் முடித்த வயதுதான் அவளுக்கும்.
போழுதுபோக்கிற்காக இசையை கற்றுக்கொள்ள வந்தவள் அவள் ..
வந்த சிறிது நாட்களிலே எல்லோரது பார்வையும் அவள் பக்கம் திரும்பியது காரணம் அப்படி ஒரு அழகு அவளிடம் .
அவளுக்காக வகுப்பிற்கு வந்தவர்கள் பலர் ,ஏன் என் நண்பர்கள் கூட அவளிடம் வழிவதை ஒரு பொழுதுபோக்காகவே கொண்டிருந்தனர் ,தன் நோக்கத்தை மறந்தனர் என்பது இன்னொரு விஷயம்.
ஆனால் அவள் அப்படி இல்லை எப்பொழுதும் எல்லோரிடதிலிருந்தும் தனித்து காணப்பட்டால் , யாரும் எளிதில் அவளிடம் நெருங்காதபடி பார்த்து கொண்டால் .

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவளின் பார்வை என்மீது விழ ஆரம்பித்தது வகுப்பில் எதுவாக இருந்தாலும் அவள் என்னிடம் மட்டும் தான் கேட்பாள்.
என் நண்பர்களுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை விட எனக்கு அதிக முக்கியதுவத்தை கொடுத்தால். என் நண்பர்களுக்கு பிடிக்கவில்லை இது யார் தான் ஒத்துகொள்வார்கள் ஒரு பெண்ணின் வெறுப்பை .
பெண்ணின் அழகு என்பது ஒன்று அவளுக்கு தொல்லை அல்லது மற்றவர்களுக்கு தொல்லை இதற்கு இவளும் விதி விலக்கல்ல...
அவள் என்னிடம் நெருங்கி பழகுவது என் நண்பர்களுக்கு பிடிக்க வில்லை ..இது பொறாமையில் ஆரம்பித்து எங்களுக்குள் பிளவை ஏற்படுத்தியது ..
முடிவு எங்களின் சொந்த இசை கல்லூரி என்ற கனவு அனன்யா வருகைக்கு பின் சில மாதங்களிலே கலைந்தது அது மட்டும் இல்லை 10 வருடமாகத்தொடர்ந்த எங்களின் நட்பு முறிந்தது .
கண்டிப்பாக அதற்கு அவள் பொறுப்பல்ல இருப்பினும் ஆண்கள் எளிதில் தன் தவறை ஒத்துகொள்ள மாட்டார்கள் அதற்கு நானும் விதிவிலக்கல்ல, என் நண்பர்கள் செய்த தவறிற்கு பழியை அவள் மீது சுமத்தினேன் வெறுத்தேன் அவளை பைத்தியகாரத்தனமாக..
காரணம் நான் நினைதுகொண்டேன் அவள்தான் என் நண்பர்களை என்னிடமிருந்து பிரிதவள் என்று, அவளின் வருகை என் கனவை சிதைப்பதற்காக என்று அப்பொழுது நான் உணரவில்லை அது எவ்வளவு பெரிய தவறு என்று ஒரு பெண்ணின் வருகை உண்மையான ஆண்களின் நட்பை சிதைத்துவிடும் என்ற அந்த எழுத படாத தத்துவத்தை ஆதரிக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே இருந்து இருந்தேன் ஆனால் எனக்கு அப்பொழுது தெரியவில்லை பெண்ணின் வருகை என்றுமே உண்மையான நட்பை பிரிகாது அவ்வாறு பிரிந்தால் அதைவிட பலவீனமானது இந்த உலகில் எதுவும் இல்லை என்று .
நான் எவ்வளவுதான் அவளை வெறுத்தாலும் அவள் மட்டும் என்னிடம் நெருங்கி பழகுவதே விரும்பினால் வேலை இல்லாமல் பைத்தியமாக சுற்றி திரிந்த நாட்கள் அது யாரும் என்னை ஆதரிக்க வில்லை என் அம்மாவை தவிர .
அவளிடம் இருந்து மட்டும் அடிகடி போன் வரும் அடுத்து என்ன செய்ய போகிறாய் எந்த உதவி வேண்டுமானாலும் கேள் நான் இருக்கிறேன் என்பாள் என் அப்பாவோட ஆபீஸ்கு அருகிலே ஒரு ப்ளாட் காலியாதான் இருக்கு அங்கேயே உன் கல்லூரியை ஆரம்பித்துகொள் என்பாள்,பணம் எதாவது வேண்டுமானால் சொல் தயங்காமல் என்பாள் நான் எங்கு சென்றாலும் என்னை பின் தொடர்வாள். இதையெல்லாம் எதற்காக செய்கிறாள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை அப்பொழுது.
ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெரியும் இதற்காக அவள் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று ஏன்னெனில் கொடுப்பதற்கு என்னிடம் தான் எதுவுமே இல்லையே ..
அவளை பற்றி கூறுவது என்றால் எனக்கு தெரிந்தது எல்லாம் இவைதான்..
அவள்பெயர் அனன்யா அவள் அப்பா பெயர் வைத்தியநாதன் ஒரு advocate ரெண்டு வருஷதுக்கு முன்னாடி இன்ஜினியரிங் முடிச்சி இருந்த இப்போ RRND Software Development Pvt ல இருக்கா அவ மியூசிக் கத்துக்க வரத்து டைம் பாஸ்கூனு சொன்ன வகுப்புல அவகிட்ட இருந்த அந்த Dedication அப்புறம் எதுக்கும் யாருக்கும் வளஞ்சிகொடுக்காம அதே சமயத்துல யார் மனதையும் புண்படுத்தாமல் பழகுற அவளோட அந்த generosity attitude இது எல்லாம் சொன்னது அவளோட character என்ன அப்படினு ..
ஒரு நாள் அது ஒரு மாலை நேரம் நான் தேனீர் கடையில் நின்று கொண்டு இருந்தேன் அப்பொழுது ஒரு கார் மெதுவாக வந்து என் அருகில் நின்றது அதில் இருந்து அனன்யா மெதுவாக இறங்கி என் அருகில் வந்தால் எனக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது அவள் எப்படி இங்கு வந்தால் எப்படி என்வீட்டை கண்டுபிடிட்டால் எனக்கு தெரியவில்லை ..
அவள் கூறினால் நான் ரெண்டுநாட்களாக உனக்கு கால் பண்ணிணேன் நீ பேசவே இல்லை அதான் உன்னை தேடி இங்கு வந்து விட்டேன் உன்கிட்டே சொல்லாமல் வந்ததற்காக முதலில் சாரி ..
நான் உன்கிட்டே கொஞ்சம் பேசவேண்டும் என்றால் ..
நான் உடனே மறுத்தேன் உன்கிட்டே நான் எதற்கு பேசவேண்டும் என்றேன் உன்னால் நான் பட்டதெல்லாம் போதும் தயவுசெய்து என்னை விட்டு விடு உன்னால் நான் என் நண்பர்களை முதலில் இழந்தேன் அதனால் என் சொந்த இசைகல்லுரி என்ற கனவு இப்பொழுது தகர்ந்து விட்டது .என் அப்பா முகத்தில் என்னால் முழிக்க முடியவில்லை அவர் சொன்னதுபோல் நான் தோற்று போய்விட்டேன் என்னால் சரியாக சாப்பிட கூட முடியவில்லை இப்போழுதெல்லாம்..
இதற்கெல்லாம் காரணம் நீதான் உன்னால் தான் இதெல்லாம் தயவுசெய்து இனிமேலாவது என்னை தொந்தரவு செய்யாதே என்று கடுமையாக அவளை திட்டினேன் ..
ஆனால் அவள் கூறியது இதுதான் முதலில் நீ என்மேல் கொண்டிருக்கும் இந்த அன்பிற்கு நன்றிகள், எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் நீ தரவேண்டும்..
நாளை நான் உன்னை ஒரு இடத்திற்கு அழைப்பேன் அங்கு மட்டும் என்னுடன் வரவேண்டும் அதன்பிறகு நான் உன்னை தொந்தரு செய்ய மாட்டேன் கண்டிப்பாக அதுதான் நான் உன்னை பார்க்கும் கடைசி சந்திப்பாக இருக்கும் என்றால் ..
எப்படியோ அவள் என்னை விட்டு சென்றால் போதும் என்றிருந்தது சரி என்று ஒத்து கொண்டேன் உடனே அங்கிருந்து அவள் சென்றுவிட்டால்..
ஆனால் அவள் அங்கிருந்து சென்ற பிறகுதான் எனக்கு தோன்றியது இன்னும் ஏன் நாம் அவளை இவ்வளவு வெறுக்கிறோம் என்று.. போதுமே என்றது என் உள்மனம் ..
மறுநாள் காலை ஒரு 6 மணி இருக்கும் அதே தேனீர் கடை அருகில் சென்று நின்றுக்கொண்டு இருந்தேன் அவள் கார் மெதுவாக வந்துநின்றது அவளே கார் கதவை திறந்துவிட்டால் நான் எதுவும் கூறாமல் சென்று அமர்ந்துகொண்டேன் அவளும் எதுவும் பேசவில்லை அவளே காரை ஓட்டினால் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு பெரிய அமைதி ...
கார் வேகமாக சென்றுகொண்டு இருந்தது எங்கு செல்கிறாய் என்று அவளிடம் கேட்க தோன்றவில்லை எனக்கு.
சென்னையின் எல்லையை தாண்டியது கார் அது ஒரு அழகான கிராமம் இரண்டுபக்கமும் பச்சைபசேல் என்று புற்செடிகள் காரில் இளையராஜாவின் பாடல்கள் என்னமோ எங்களுக்காகவே எழுதியதை போன்றிருந்தது..
மிகவும் அழகான ஒரு பயணம் அவளுடனான அந்த பயணம் ..
அந்த ஊர் கொஞ்சம் கிராமம் கொஞ்சம் நகரம் சேர்ந்த ஒரு கலவை போல் இருந்தது அங்கே ஒரு சின்ன ஓட்டல் அங்க கார் நின்றது ரெண்டுபேரும் காரை விட்டு இறங்கினோம் எதற்கு இங்கு அழைத்து வந்தால் என்று எனக்கு தெரியவில்லை கேட்கவும் தோணவில்லை இருவரும் சென்று அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்தோம் அவள் எதுவும் பேச ஆரம்பிக்கவில்லை வந்ததில் இருந்து நீண்ட நேரமாக எதரே ஒரு சின்ன பெட்டிக்கடை இருந்தது அதையே பார்த்துகொண்டு இருந்தல் அங்கு என்ன இருக்கிறது என்று நானும் பார்க்க ஆரம்பித்தேன் அபோழுதுதான் அந்த அற்புதத்தை கண்டேன் என் வாழ்கையை எனக்கு சொல்லிக்கொடுத்த நாள் அது ..
ஒருவர், வயது ஒரு 25 இருக்கும் அவருக்கு இரண்டு கால்களும் இல்லை அந்த பெட்டிகடைக்கு அருகில் ஒரு பெரிய ஆலமரம் அவரது மூன்றுசக்கரவண்டி அங்கே வந்து நின்றது தரையில் ஒரு பெரிய துணியை விரித்தார் இந்தியாவில் இருக்கும் எல்லா நியூஸ் பேப்பர்களும் அங்கு இருந்தன ஒரு தற்காலிக நியூஸ்பேப்பர் கடையை அங்கே உருவாக்கினார் அரைமணிநேரத்தில் அனைத்தும் அங்கே விற்றுதீர்ந்தன அவரை எல்லோரும் நம்பிவாங்கினர் ..
மணி காலை 7 ஆனது அவர் வண்டியில் ஏறி எங்கயோ புறப்பட்டார் உடனே அனன்யா என்னை அங்கிருந்து அழைத்துக்கொண்டு ஒரு பள்ளி அருகே சென்றால் அங்கே அவர் இன்னொரு கடையை உருவாக்கிக்கொண்டு இருந்தார் ஆம் பள்ளி குழந்தைகளுக்கான திண்பண்டங்கள் பேனா, பென்சில்,நோட்டுகள் கொண்ட ஒரு சின்ன கடை அது..
காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கான கடை அது 9 மணி வரை நீடித்தது அந்த mobile chilrens store ..பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டவர் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வு..
மணி ஒரு 10 இருக்கும் அங்கே இருக்கும் ஒரு VAO Officeku சென்றார் அங்கே அவருக்காக ஒரு chair காத்துகொண்டு இருந்தது வெறும் application 10 ரூபாய் பூர்த்திசெய்து தரவேண்டும் என்றால் 15 ரூபாய் இதுதான் அவரது வியாபாரம் ..
மணி 1 ஆனது மீண்டும் பள்ளிக்கு அருகில் அந்த mobile childrens store 2 மணிவரைக்கும் அதன் பிறகு அவருக்கு மதிய உணவு கொஞ்சம் ஓய்வு 4 மணியில் இருந்து 5 மணிவரை மீண்டும் அந்த mobile childrens store அங்கே ..
அதன்பிறகு 6 மணியில் இருந்து 9 வரை ஒரு கடை பாட்டு புத்தகங்கள் , படங்களின் CD/DVD கள் அதன்பிறகு எல்லா சிம்கார்ட்கள் மற்றும் அதற்க்கு தேவையான Recharge Card கள் அனைத்தையும் உள்ளடக்கியது அந்த கடை ..
இவை அனைத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்துகொண்டு இருந்தேன் என் அருகில் இருந்தவள் அனன்யா அன்று காலையில் இருந்து என்னிடம் அவள் எதுவுமே பேசவில்லை ..
அந்த உயர்ந்த மனிதனை பற்றி பேச ஆரம்பித்தால் அனன்யா ..
அவர் பெயர் சபரி கிருஷ்ணன் அவர் என்னோட இன்ஜினியரிங் கிளாஸ் மேட் ஆமாம் நானும் அவனும் ஒன்னாதான் இன்ஜினியரிங் படிச்சோம் ஒரே காலேஜ்லே..
அவனுக்கு அவன் அப்பானா ரொம்ப பிடிக்கும் அவன் காலேஜ்ல ஒரு பெண்ணை காதலிச்சான் அவளும் அவனை காதலிச்சால் அவர்கள் இருவரின் காதல் ரொம்ப அழகா இருந்தது ..
விஷயம் ரெண்டுபேர் வீட்டுலயும் தெரிஞ்சது அவனது வீட்டுல ஒத்துகிட்டாங்க ஆனால் அந்த பெண்ணின் அப்பா கொஞ்சம் ஜாதி பிரியர் ஆனால் அதை அவர் காட்டிக்கொள்ளவில்லை அவனிடம் மிகவும் நாகரீகமாக நடந்துகொண்டார்.
அவர் ஒன்றை மட்டும் கூறினார் எனக்கு உன்னை மிகவும் பிடிச்சி இருக்கு ஆனால் ஒரு கவலை மட்டும் தான் எனக்கு இருக்கிறது ..
வேற எதுவும் இல்லை உனக்குன்னு ஒரு சொந்த வீடு இல்லை நிரந்தர வருமானம் இல்லை எப்படி நீ என் பெண்ணை நன்றாக பார்த்துகொள்வாய் என்று உன்னை நான் நம்புவது என்றார் ..
அவனால் திருப்பி எதுவும் பேச முடியவில்லை ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டான் ஒருவேளை நான் நீங்கள் கேட்டதுபோல் என் வாழ்கையை உருவாக்கிக்கொண்டு உங்களிடம் வந்தால் அப்பொழுது நீங்கள் ஒத்துகொள்வீர்களா என்ற அவர் கூறினர் அதுவரை நான் காத்துகொண்டு இருக்கிறேன் என்று ..
இன்ஜினியரிங் முடித்தான் ஒரு நல்லவேளை கிடைத்தது..
வேலை கிடைத்து ஒரு மூன்று மாதம் இருக்கும் அவனும் அவன் அப்பாவும் காரில் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் ஒரு பெரியவிபத்து ..
ஆம் அவன் தந்தையை அங்கே இழந்தான் ..
தன்னுடைய இரண்டு கால்களையும் தன் தந்தைக்கு துணையாக அனுப்பி வைத்துவிட்டு கால்களை இழந்தவனாய் வீடு திருப்பினான் தாயை காண ..
உனக்கு ஒன்று தெரியுமா அந்த விபத்தை ஏற்படுத்தியவர் வேறு யாரும் இல்லை அவனது காதலியின் தந்தை அந்த ஜாதி பிரியர் தான் ..
இது இவனுக்கு தெரியும் ஆனால் இவன் அதற்க்காக கோவமோ ஆத்திரமோ கொள்ளவில்லை
தன் ஜாதி கொள்கையை விட்டுகொடுக்க கூடாது அதேசமயத்தில் எல்லோரிடமும் நல்லவரை போல் காட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காக பின் நின்று தாக்கிய அந்த உயர்ந்த மனிதரை பார்த்து வருத்தப்பட்டதுமில்லை ..
உன்னால்தான் என் தந்தையை இழந்தேன் என்று அவனது காதலியை வெறுக்கவும் இல்லை அதேபோல் இந்த காதலால் தான் என் கால்களை இழந்தேன் என்று காதலை வெறுக்கவும் இல்லை ..
தெரிந்துகொள் அவனிடம் இருந்து இதை நீ உன் நண்பர்கள் அந்த ஜாதி பிரியருக்கு சமமானவர்கள் உன் கனவை சிதைத்தது உங்களின் பலவீனமான நட்பு ..
நட்பின் வலிமையை காலம் நிர்ணிப்பது இல்லை அது உண்மையான அன்பால் நிர்ணிக்கபடுகிறது என்று .என் கனவை சிதைத்தவள் நீ என்று என்னை பார்த்து அடிகடி கூறினாய் ஆனால் அந்த கனவை நிறைவேற்ற நீ இதுவரை என்ன செய்தாய் ??
நீ தோற்றத்துக்கு காரணம் உண்பலவீனமான நட்பை நீ நம்பியது ..
நீ தோற்றத்துக்கு காரணம் உன் அப்பாவை இதுவரை நீ நம்பி இருந்தது ..
இதில் இருந்து முதலில் வெளியே வா கண்டிப்பாக நீ வெற்றி பெறுவாய் ..
அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அவள் .

ஒரு அழகான புன்னகையுடன் அங்கிருந்து விடைபெற்றாள் ..
ஒரு ரவிவர்மன் ஓவியம் போல் இருந்தது மிகவும் அழகாக அவளின் புன்னகை ...
அப்பொழுதுதான் தெரிந்தது பெண்ணின் புன்னகை என்பது ஆண்களின் மனதை சிதைபதற்கு மட்டும் இல்லை சிதைந்த என்போன்ற மனங்களை சிற்பியாக இருந்து செதுக்குவதற்கும் என்று ..

அன்று ஆரம்பித்தேன்
வீட்டு புரோக்கர் ஆகா இருந்தேன், ஒரு வீடு பார்த்துகொடுத்தால் அரைமணிநேரத்துகுல் 3000 ரூபாய்க்கு மேல கிடைக்கும் ..
கல்யாண புரோக்கர் ஆகா இருந்தேன்
காலையில் குழந்தைகளுக்கு சிங்கிங் சொல்லித்தருவேன்
week end - ல கிட்டார் சொல்லித்தருவேன்
நியூஸ் பேப்பர் போடுவேன்
பால் பாக்கெட் போடுவேன்
evening டைம்ல students -கு டியூஷன் சொல்லித்தருவேன்
turist-களுக்கு guide ஆக இருந்தேன் ஒருநாள் கூடவே இருந்தாள் 2000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும்
கல்யாணங்களில் cooking assistent ஆகா இருதிருகிறேன் ஒருமணி நேரத்துல 300மேல
painter ஆகா இருந்து இருக்கிறேன் ஒரு நாளைக்கு 700க்கு மேல
construction நடந்த இடங்களில் lifter ஆகா இருந்தேன்
எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் நைட் வாட்ச்மன் ஆகா இருந்திருக்கிறேன் ஒரு மாதம் செய்தால் 8000 ரூபாய்க்கு மேல கிடைக்கும் ..

ஒரு மாதத்தில் சுமார் 30000 த்துக்கும் மேல் எளிதில் கிடைத்தது நிற்க கூட நேரம் இல்லாமல் கடுமையாக உழைத்தேன்..
சரியாக வெறும் மூன்று வருடம்தான் என் அப்பாவையும் எதிர்ப்பார்க்க வில்லை என் நண்பர்களையும் எதிர் பார்க்கவில்லை எனக்குத்தேவையான பணத்தை நானே சம்பாதித்தேன்
என் கனவு கல்லூரியை வெற்றிகரமாக ஆரம்பித்தேன் என் அப்பா பெருமை கொண்டார் அன்று என்னை பார்த்து ..
இதோ இந்த அழகான வாழ்க்கை என்னோட அந்த மூன்று வருட கடுமையான உழைப்பில் உருவானது ..
இந்த மூன்று வருடத்தில் அனன்யாவை பார்க்கவும் முடியவில்லை பேசவும் முடியவில்லை அவள் எங்கு சென்றால் என்றே தெரியவில்லை அவளின் பிரிவை அந்த மூன்று வருடத்தில் தான் முழுமையாக உணர்ந்தேன் அவளை எப்படியாவது பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன் ஆனால் அதற்க்கு வாய்ப்பே கிடைக்கவில்லை ..
ஒரு நாள் அனன்யாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அது அப்படிப்பட்ட ஒரு சந்திப்பாக இருந்து இருக்க கூடாது ..
ஆமாம் ஒரு நாள் நான் படித்தபள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது என் நண்பர்கள் எல்லோரையும் சந்திக்கும் ஆர்வம் நெஞ்சை பீறிட்டு வந்தது .
மிகவும் ஆர்வமாக அங்கே சென்றேன் எல்லோரையும் பார்க்கவேண்டும் என்று..
அங்குதான் அனன்யாவை மீண்டும் பார்த்தேன் என்ன ஆச்சரியமாக இருகின்றதா??
ஆம் எனக்கும் ஆச்சரியமாகதான் இருந்தது அது ஒரு பெரிய அதிர்ச்சியும் கூட ..
அவளே என்னை நோக்கி வந்தால் வந்தபிறகு அவள் என்னை பார்த்துகேட்டது இதுதான்
என்னை “பார்த்த ஞாபகம் இல்லையோ “ உனக்கு ??
எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பொழுது..
அவள் எப்படி இங்கு வந்தால் என்று ஒன்றுமே புரியாமல் திகைத்தேன் ..
எப்படி இருக்கிறாய் அனன்யா என்று கேட்டேன் ..
அவள் கூறினால் என்பெயர் அனன்யா இல்லை சுஜிதா , சுஜிதா வைத்தியநாதன் ..
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ..

பிறகு அவளே எல்லாவற்றையும் கூறினால் அவள் யார் என்று .
ஆம் அவள் பெயர் சுஜிதா..
இது அவளோட ஸ்கூல் நேம் அவளை வீட்டில் அழைப்பது தான் அனன்யா என்று..
அவள் 4th standard-ல என்னோட ஸ்கூலில் வந்து சேர்ந்தால் ஒரு வருஷம் தான் என்னோட படித்தல் அப்புறம் போய்விட்டால் அந்த ஸ்கூல்லை விட்டு
நாங்க 4th standard படிக்கும் பொது ஒரு நாள் அவளோட birthday
அன்னிக்கு madam அவளுக்கு gifta என்னை பாட சொன்னங்க
ஆமா நான் பாடினேன் கூடவே கிட்டார்ரும் play பண்ணேன் அப்பொழுது அவளுக்காக
எல்லாத்தையும் ஞாபகம் வெச்சி இருந்தால் எல்லாத்தையும் ஷேர் பண்ணிகிட்டால் என்கிட்ட ரொம்ப சந்தோஷமாக இருந்தது எனக்கு அப்பொழுது ..
யார் என்று தெரியாமலே இவ்வளவு நாள் பழகினது கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது ஆனால் அவளுக்கு தெரிந்து இருந்தது என்னை ..
எப்படி என்னை கண்ண்டுபிடித்தாய் என்று கேட்டேன்
ஒருநாள் என் காலேஜ் instincts அப்போ அங்கே நீ வந்து இருந்தாய் ..
அங்கே நீ கிட்டார் வாசிச்சே ரொம்ப அழகா இருந்ததது உன் பெயர் என்ன அப்படின்னு friends கிட்ட கேட்டேன் எல்லோரும் ஸ்ரீதர் அப்படின்னு சொன்னாங்க உடனே எனக்கு நீ தான் ஞாபகத்துக்கு வந்தாய் ..
நீ சின்ன வயசுலஅப்போ எனக்காக play பண்ணின கிட்டார் அதான் ஞாபகம் வந்தது அதுக்கப்புறம் அதை உரிதிபடுத்திகொள்ள facebook ல உன்னோட profile போய் பார்த்தேன் அதுக்கப்புறம் தான் உன்னோட மியூசிக் காலேஜ்ல சேர்ந்தேன் என்றாள் ..
எல்லாம் நல்லாவே போய்கொண்டு இருந்தது அவள் பேசபேச எனக்கு அப்பவே என்னோட காதலை அவள்கிட்ட சொல்லணும் அப்படின்னு தோனுச்சி ..

அப்பொழுதுதான் அவள் கூறினால் இது என்ன பெரிய அதிர்ச்சி இப்போழுதுதருகிறேன் பார் இதைவிட பெரிய அதிர்ச்சி என்பதுபோல் ..
ஆம் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றாள் ..
அப்பொழுது நான் இருந்த சந்தொஷத்திர்கெல்லாம் ஒரு முற்று புள்ளியை போல் இருந்தது அவள் அவ்வாறு கூறியது ..
என் கணவரை அறிமுகபடுத்துகிறேன் உனக்கு என்று கூறி ஒரு அறைக்குள் நுழைந்தால் வெளியே வந்தவர் வேறு யாரும் இல்லை நம் சபரி கிருஷ்ணன் தான் அவர் ....!!!
அன்று சபரி கிருஷ்ணனை பற்றி கூறும்பொழுது அவரின் காதலி என்று அனன்யா கூறியது வேறு யாரையும் இல்லை இவளை தான் ..
அனன்யாவின் தந்தைதான் அந்த ஜாதி பிரியர்..
ஆம் சபரி கிருஷ்ணன் தன் தந்தையையும் தன் இரண்டு கால்களையும் இழக்க காரணமானவர் அந்த மகா புருஷன் எல்லாம் வேறு யாரும் இல்லை அனன்யாவின் தந்தை வைத்தியநாதன் தான் ..

இப்பொழுது நான் என்ன செய்வது என் காதலில் நான் தோற்றதற்காக வருத்தம் கொள்வதா இல்லை சபரி கிருஷ்ணன் தன் காதலில் வெற்றி பெற்றதுக்காக மகிழ்ச்சி கொள்வதா ??
நான் கண்டிப்பாக சபரிக்காக மகிழ்ச்சிதான் கொண்டேன் ஏன் எனில் நானும் அனன்யாவுடன் சில நாட்கள் பழகிஇருக்கிறேன் அவளின் குணத்தில் கொஞ்ஜமாவது எனக்கு இருக்கவேண்டும் அல்லவா .???


- Jayaraman E

எழுதியவர் : Jayaraman E (8-Jan-14, 12:35 pm)
பார்வை : 238

மேலே