காதலென்னும் சோலையினில்35

தாரா வெளியில் சென்றதும் ராஜசேகரன் உள்ளே வந்தான்......


கவிதாவும் ராஜலேக்ஷ்மியும் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் அழகை மறைவாய் நின்று ரசித்தான் இதை பார்த்த ராஜலெக்ஷ்மி!


தனியாக ஓரமாய் நின்று பார்க்கவேண்டாம் இது உங்களுக்கு சொந்தமானது நீங்கள் நேராய் நின்று ரசிக்கலாம் என்று கவிதாவை பார்த்து புன்னகைத்து சொன்னாள்.......


வெட்கத்தை மறைத்து தோட்டத்திற்குள் சென்றான்; என்ன ராஜலெக்ஷ்மி எதற்காக உடனே வாருங்கள் என்று அழைத்தாய் என்று கேட்டான்.


ஒ! அதுவா சொல்றேன் கொஞ்சம் உட்காருங்க அம்மாவையும் அழைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே தன தாயை அழைக்க வீட்டிற்குள் சென்றாள்..........


என்ன என்பது போல் கவிதாவை பார்த்து கொஞ்சம் புன்னகை செய்து விட்டு பார்வையால் கேட்டான்?


அவள் முறைக்கும் தோரணையில்; உங்கள் காதல் லீலைகளும், ஏமாற்று லீலைகளும் உங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் தெரிந்து விட்டது என்றாள்.......


அது; எப்படி!எல்லாமா? என்று பேச ஆரம்பித்தவன் அம்மாவும் தங்கையும் வர கண்டதும் நிறுத்திவிட்டான்.


தாய் வந்ததும் அனைவரும் அந்த அழகிய புல்தரையின் மீது உட்கார்ந்தார்கள்.


என்னடா அவள் சொன்னதெல்லாம் உண்மையா? என்று கேட்டாள் தாய்.
என்ன அம்மா நீங்களும் இப்படி புதிர்போட்டு பேசுறீங்க? என்ன என்று விஷயத்தை சொன்னால் தானே தெரியும் என்றான்.....


(இப்பொழுது அனைவரும் அமைதியானார்கள் ராஜலெக்ஷ்மி களத்தில் இறங்குகிறாள்(பேச ஆரம்பிக்கிறாள்).


கவிதாவிடம் கேட்ட அத்தனை கேள்விகளையும் ராஜசேகரனிடமும் கேட்கிறாள்&கவிதாவின் பதில்களையும் கூறுகிறாள் .........


4 வருடங்களுக்கு முன்பு.....................நேற்று வரையுள்ள அனைத்தும் கேட்டு முடிக்கிறாள்............


அவள் கேட்டதைப்பார்த்து ஒரு நிமிடம் திகைத்துதான் போனான், அப்படியே சிலை வைத்தகண் வாங்காமல் parthan.....அவனின் பார்வையை அறிந்த ராஜலெக்ஷ்மி சொல்லுங்கள் அண்ணா என்றாள்...........


இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சொல்ல ஆரம்பமானான்..


கவிதாவிற்கு வாக்கு கொடுத்தது உண்மைதான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவளை சந்தித்து பேசமுடியவில்லை என் நிலைமை அப்படி என்றான்,,,,,,,,,,,,


அப்படி என்ன நிலைமை அடுத்த பெண்ணை ஏமாற்ற சென்றீர்களா? என்று தன் அமைதியை இழந்து கேட்டாள் கவிதா;

அண்ணி நீங்க கொஞ்ச நேரம் பேசாமலிருங்கள்; அண்ணன் பேசி முடித்த பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சமாதானம் அடைய செய்தாள் ......

தாயும் மகனை பரிதாபமாக பார்த்தாள்.


சிறிது நேரம் கழித்து அவன் மறுபடியும் பேச ஆரம்பித்தான்;
அப்பா இறந்ததும் நம்ம கம்பெனிய முன்னுக்கு கொண்டு வர நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் அப்படி நான் கஷ்டப்பட்டதால தான் இந்த அளவுக்கு கொண்டு வர முடிந்தது இல்லையென்றால் நீ நான் அம்மா இப்படி வாழ்ந்திருக்கவும் முடியாது என்றான்.


சரி அண்ணா புரியுது அப்பா இறப்பதற்கு முன்னாலயே நீங்கள் இருவரும் காதலித்திருக்றீர்கள் இல்லையா?


ஆமா! என்றான்,,,,,,,,,,,,,,,

அப்பொழுது ஏன் அப்பாவிடம் சொல்லவில்லை எனக்கேட்டாள் ராஜலெக்ஷ்மி!


அது வந்து என்று இழுத்தான் தயவு செய்து மறைக்காமல் எல்லாம் சொல்லி விடுங்கள் அண்ணா என்று கெஞ்சினாள் ராஜலெக்ஷ்மி.........


எல்லாம் இவளால் தான் என்று கவிதா பக்கம் கையை நீட்டினான்!!!!!!!!




தொடரும்,,,

எழுதியவர் : (8-Jan-14, 2:59 pm)
பார்வை : 239

மேலே